♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்னை அழைத்தார் என்னை அழைத்தார்
என் பெயரைச் சொல்லி இயேசு அழைத்தார்
என்னை அழைத்தார் என்னை அழைத்தார்
தன் திருமுகம் காண இயேசு அழைத்தார்
1. நான் ஆடிடுவேன் நான் பாடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் (2)
சரணாகதி நான் அடைந்திடுவேன் -2
சகலமும் அவரிடம் படைத்திடுவேன்
2. அனுதினம் அவரை நான் துதித்திடுவேன்
தரிசித்திட நான் விழித்திடுவேன் (2)
இறை வார்த்தையில் நான் நிலைத்திருந்து -2
அவரன்பில் முழுமை அடைந்திடுவேன்