♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்ன தருவேன் நான் உனக்கு
சின்னக் குழந்தை என் இயேசுவே (2)
அன்னைமரியின் பாலகனே - இந்த
அகிலம் போற்றும் நாயகனே (2)
1. உள்ளமென்னும் கோயிலை உனக்குக் கொடுப்பேன்
உயிரோடு வாழும் வரை
உடல் பொருள் ஆவியெல்லாம் நீதானே எந்நாளும் ஏது குறை (2)
தத்தித்தவழும் தங்க ரதமே
முத்தம் தந்திட நித்தம் வருவேன் - ஆரி ராரிராரி ராரோ -2
2. மனிதம் புனிதம் அடைவதற்கு மழலை வடிவில் நீ பிறந்தாய்
இருளில் வாழும் என்னையும் நீ ஏற்று
உலகின் ஒளியாய் பிறந்தாய் (2) - தத்தித்தவழும்...
மண்ணுலகில் என்னை காத்திடுவீர்
மாட்டுத் தொழுவில் நீ பிறந்தாய்
வளர்ந்து நானும் வாழ்ந்திடுவேன் நானும் உந்தன் தயவால் (2)