மண்ணில் வந்த நிலவே மகிமை சேர் மலரே வருவாய் இறையரசே அருள் தருவாய் தினம் எமக்கே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மண்ணில் வந்த நிலவே மகிமை சேர் மலரே

வருவாய் இறையரசே அருள் தருவாய் தினம் எமக்கே (2)


1. குழந்தை வடிவினில் இறைவன் வந்தார்

குமத மலர்போல் இதழ் விரித்தார் (2)

ஞானியர் போற்றிய தேவமகன் - 2

மாடடை குடிலில் பிறந்துள்ளார்


2. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

ஆண்டவர் இயேசுவை எதிர்பார்த்தார் (2)

வாடிடும் பயிருக்கு மாமழைபோல் - 2

மாமரிப் பாலகன் பிறந்துள்ளார்