♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்னைப் பிரிந்து உன்னால் எதுவும் செய்ய இயலாது-2
உன்னை வாழ்விக்கவே என்றும் உன்னோடு நானிருப்பேன் - 2
1. சுமைகளின் பாரத்தால் நீ சாயும் போது
இமைகளைப் போல உனை என்றும் காப்பேன்
சுகங்களை இழந்து நீ விழும்போது
சுகம் தரும் மருந்தாக எனைத் தந்து காப்பேன்
உயிர் தந்து உடல் தந்து உன்னை என் உறவாக்கினேன் - 2
உன்னை என்றும் மறவாமலே
என் கரத்தால் உனைத் தாங்குவேன் (2)
2. கடல்போல சோகங்கள் உனைச் சூழும்போது
காப்பாற்றி கரைசேர்க்கும் ஓடம் நானாவேன்
ஊரெல்லாம் வெறுத்து உறவுகள் பிரிந்தாலும்
உன் உறவுக்காய் ஏங்கும் நண்பனும் நானே
உனைத்தேர்ந்து ஒளிதந்து உனக்கு நல் வழிகாட்டினேன் - 2
துணையாக வரும் எந்தன் கரம் பற்றி நடந்திடுவாய் - 2