♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இதயம் இணையும் நேரம் இன்பத் திருவிழா
இறைவன் உறையும் நேரம் அன்புப் பெருவிழா (2)
ஆடுவோம் பாடுவோம் ஆனந்தமாய் வாழுவோம்
அன்பினில் பண்பினில் அவனியை மாற்றுவோம் (2)
1. இனிய ராகத்தில் இன்ப ஓசையில்
இதய ராகம் எங்கும் ஒலிக்குது
அன்புப் பாதையில் அருள் வடிவினில்
அறங்கள் யாவும் ஆடிப்பாடுது (2)
இறைவன் வாழும் இல்லம் அமைத்து மகிழவும்
இறைவன் ஆட்சி செய்யும் குடும்பம் அமைக்கவும்
அன்பராய் நண்பராய் என்னில் வருகின்றார் -2
2. புதிய பாதையில் புதிய பார்வையில்
புதிய வாழ்க்கைப் பயணம் தொடங்குது
புரட்சி நெறிகளில் புகழ்ச்சிப் பாக்களில்
புதிய பூமி மலரப் போகுது (2)
அமைதி வாழும் இல்லம் கட்டி எழுப்பவும்
அன்பு தெய்வம் வாழும் உறவு மலரவும்
அன்பராய் நண்பராய் என்னில் வருகின்றார் -2