காணிக்கை தரும் நேரம் நான் என் மனம் தருகின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை தரும் நேரம்

நான் என் மனம் தருகின்றேன் -2

ஏற்றருளும் தெய்வமே எளியவன் தருகின்ற காணிக்கையை -2


1. படைப்புகள் பலவாகினும் பரமன் உமக்கே சொந்தம் -2

அதில் மலராகும் என் மனம் உன்னிடத்திலே -2

மணம் காண ஏற்றிடுமே -2


2. பிறரன்புப் பணிகளெல்லாம் தலைவன் உமதன்றோ -2

என்றும் உமதன்புப் பணியில் என் வாழ்வினை -2

பலியாக ஏற்றிடுமே -2