ஒரு வார்த்தை சொன்னால் போதும் என் ஊழியன் குணமடைவான்


ஒரு வார்த்தை சொன்னால் போதும்

என் ஊழியன் குணமடைவான் - 2 (2) இயேசுவே - 4 (2)


1. ஒருவனை நோக்கி போ என்றால் போகிறான்

மற்றவனை நோக்கி வா என்றால் வருகிறான்

அகிலத்தைப் படைத்தவர் நீரன்றோ

ஆணையிடும் அது நிறைவேறும் - இந்த (2)


2. கல்வாரி வேதனையில் கள்வனின் குரல் கேட்டீர்

இன்றே வான்வீட்டில் இருப்பாயென்று சொன்னீரே

வாழ்வுக்கு வழிகாட்டும் நல்விளக்கு

வான் வீட்டில் எமைச் சேர்க்கும் உம் வாக்கு - எம் (2)