♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே
உடல்பொருள் ஆவியையும்
எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே (2)
1. சிந்தனை சொல் செயல் அனைத்தையும் தந்தோம்
நிந்தனை யாவையும் ஏற்கவும் துணிந்தோம் (2)
2. அனைத்தும் உம் அதிமிக மகிமைக்கே என்று
ஆர்வமாய் வாழ்ந்திட துணைபுரிவாயே (2)
3. உம் அருள் ஒன்றே எமக்கென்றும் போதும்
உம் பதம் நாங்கள் சரண் அடைந்தோமே (2)