சவேரியாரே எம் நல்ல தந்தையே
தாரும் உறுதியை எங்களுக்கு
நாளும் உமது நல்ல மாதிரியை
நாங்களும் கண்டு ஒழுகிடவே
1. உலகமெல்லாம் அடைந்தாலுமென்ன
ஒழியா ஆத்துமத்தை யிழந்தால்
உலக மதற்கு ஈடாகுமோ என
ஒளி உள்ளத்தில் உதித்ததுவே
2. அகத்தில் உதித்த இந்த நினைவு
அகத்தை ஜெயிக்க இயேசுவுக்கு
மனதில் அவர்க்கு உறுதி தர
தினத்தே துணிந்தார் தீரர் அவர்