இறையாட்சி மலரவேண்டும் புதுவாழ்வு புலரவேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறையாட்சி மலரவேண்டும் புதுவாழ்வு புலரவேண்டும் -2

வார்த்தை மனுவாக இங்கு நீதி நிலைக்க வேண்டும் - 2

நிலைமாறுமா கரம்சேருமா வலுவாகுமா துயர் மாறுமா

நிலைமாறுமே கரம்சேருமே வலுவாகுமே துயர்மாறுமே

விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்

விரைவில் நாம்காண்போம்


1. பாலும் தேனும் பொழிந்திடுமே கானான் கனவு பலித்திடுமே

பாறை தண்ணீர் சுரந்திடுமே மன்னா நமது தரைவிழுமே

பாலை நிலங்கள் யாவும் இங்கு பசுமை நிறங்கள் ஆகும் (2)

விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்

விரைவில் நாம்காண்போம்


2. சிங்கமும் கன்றும் தோழமையில் சிறுவர் நட்பில் பாம்பருகில்

வேலும் வாளும் ஏர்முனையில்

துமுக்கிகள் எல்லாம் பூப்பொழிவில்

பாடும் மனங்கள் யாவும் இனி பாசம் நிறைந்ததாகும் (2)

விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்

விரைவில் நாம்காண்போம்