♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அன்பே இறைவா அனைவரும் ஒன்றாய்
அகிலத்தில் வாழ்ந்திட அருள்புரியும் (2)
ஒன்றாய் வாழ்ந்திட நன்றாய் வாழ்ந்திட
அன்பாய் வாழ்ந்திட அருள்புரியும் (2)
1. தனியாய் பிறக்கும் மானிடர்கள்
துணையாய் வாழ்ந்திட அருள்புரியும் (2)
இணையாய் சமமாய் ஆணும் பெண்ணும்
இருகரம் கோர்த்திட அருள்புரியும் - 2 ஒன்றாய் ...
2. தந்தையும் தாயும் குடும்பத்திலே
சிந்தை ஒன்றாகிட அருள்புரியும் (2)
பிள்ளைகள் பெற்றோர் பாசத்திலே
பிணக்குகள் தீர்ந்திட அருள்புரியும் - 2 ஒன்றாய் ...
3. சாதியும் பிளவும் மதவெறியும்
நஞ்சென்று விலக்கிட அருள்புரியும் (2)
நீதியை விதைத்து அமைதியையே
அறுவடை செய்திட அருள்புரியும் - 2