புதுவாழ்வு நான் பெறவேண்டும் புனிதங்கள் நான் தேட வேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புதுவாழ்வு நான் பெறவேண்டும்

புனிதங்கள் நான் தேட வேண்டும் (2)

புதிரான என் வாழ்வில் புனிதா உன் ஆற்றலால் (2)


1. வெறுமையிலே நான் வாடும் போது

துணையாக நீதானே வருகின்றாய் (2)

கயமையிலே நான் அழிந்தாலும் - 2

ஆதரவாய் நீதானே இருக்கின்றாய் - 2


2. துயரினிலே நான் துவண்டாலும்

துணையாக நீதானே இருக்கின்றாய் (2)

தோல்வியிலே நான் சரிந்தாலும் - 2

வெற்றியென நீதானே இருக்கின்றாய் - 2