எந்தன் இதயம் பாடும் நேரம் எங்கும் ஆனந்தம்-2
உன் உறவில் கலந்தே நான் உந்தன் புகழைப் பாடுவேன்
உந்தன் அன்பும் அருளுமே எந்தன் இனிய வாழ்வில் கீதங்கள்
1. எந்தன் இதயக் குரலிலே உன் ராகங்கள் கேட்குதே
பொங்கும் கான மழையிலே எந்தன் உள்ளம் நனையுதே
மலரின் மணமாம் இயேசுவைப் பலரும் போற்ற வாழ்த்துவேன்
உன் அன்பும் உன் அருளும் என்னிடத்தில் கூட
உன் உயிரில் நான் கலந்து உன் புகழைப் பாட (2)
2. பாயும் நீரின் நடுவிலே என் வாழ்வின் ஓடங்கள்
மின்னும் தூர ஒளியினைக் கண்டும் உள்ளம் கலங்காதே
ஒளியின் ஒளியாம் இயேசுவை உணர்ந்தே ஓடம் செலுத்துவேன்
உன் அன்பும் உன் அருளும்...