♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உன் கரத்தோடு என் கரம் சேர்த்து
ஒவ்வொரு நாளும் நடந்திடுவேன்
உன் விழியாலே உலகைப் பார்த்து
ஒவ்வொரு நாளும் வளர்ந்திடுவேன்
இயேசுவே தலைவா மன்னவா முதல்வா
உன் ஒளியாலே மலர்ந்திடுவேன் -2
1. மழலை மலர்கள் உனது மடியில்
மகிழ்ந்து ஆடிட நான் காண்பேன்
வளர்ந்த பிறகும் குழந்தை உள்ளம்
வேண்டுமென்றே வரம் கேட்பேன் - 2
உன் ஒளியாலே வளர்ந்திடுவேன்
2. வயல்வெளிமலர் அழகின் ஒளியில்
வள்ளல் தன்மையை நான் காண்பேன்
தயவு மிகுந்த தந்தையை நம்பி
பயமில்லாமல் நான் நடப்பேன் -2
உன் ஒளியாலே வளர்ந்திடுவேன்
3. கதறும் விதவை கண்ணீர் கண்டு
கலங்கும் உந்தன் முகம் பார்த்தேன்
சிதைந்த இதயங்கள் சிந்தும் கண்ணீர்
சிந்தையில் விழ சிலிர்த்திடுவேன் -2
உன் ஒளியாலே வளர்ந்திடுவேன்