♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உன் கையில் என் பெயரெழுதி இறைவா
உன் நெஞ்சில் என் நினைவெழுதி (2)
என்றென்றும் என்னை நிலைக்கச் செய்தாய் - 4
உன் நெஞ்சில் என் நினைவெழுதி இறைவா
என்னை நீ நிலைக்கச் செய்தாய்
1. என் கண்ணில் உந்தன் வடிவெழுதி
இம்மண்ணில் உந்தன் அடிதொழுது (2)
பித்தனாய் என்னை அலையவிட்டாய் - உன்
பக்தனாய் என்றும் தொடரவிட்டாய் (2)
2. என் கண்ணீரில் உந்தன் பாதம் கழுவி
உன் மலர்பதத்தில் என் இதழ் பதித்து (2)
உள்ளத்தை உடைத்து வார்த்துவிட்டேன் உன்
இல்லத்தை அடைந்து உயர்ந்துவிட்டேன் (2)