♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் இயேசு நாதனைப் பாட
ஒரு கோடி நாவுகள் வேண்டும் (2)
அவர் காட்டும் வழியினில் போக
இங்கு பலகோடி பாதங்கள் வேண்டும்
இயேசுதான் எனக்கெல்லாமே இயேசுதான் இங்கு எல்லாமே - 2
1. பொருள் தேடி புகழ்த் தேடி அலைந்தேன்
அவை பெறுமட்டும் நிம்மதி இழந்தேன் (2)
உனைத் தேடி வந்து உன்னோடு இணைய
எனக்கின்று அருள் வேண்டுமே (2)
நீயில்லையேல் நானில்லையே
உன் அன்பில்லையேல் என் உயிரில்லையே
2. உறவென்று பலமென்று எண்ணி
உலகெல்லாம் என் பக்கம் சேர்த்தேன் (2)
நிலையற்றதால் அவை போனதே
நிலையான நீ வேண்டுமே (2)
நீயில்லையேல் நானில்லையே
உன் அருளில்லையேல் என் வாழ்வில்லையே