♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம் (2)
1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோசம் பக்தருக்களிக்கும் (2)
2. பரிமளத் தைலமாம் இயேசுவின் நாமம்
பாரெங்கும் வாசனை வீசிடும் நாமம் (2)
3. வானிலும் புவியிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் (2)
4. நேற்றும் இன்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் (2)
5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் (2)
6. சாத்தானின் சேனையைச் செயித்திட்ட நாமம்
சாவப் பிசாசைத் துரத்திடும் நாமம் (2)