♫ பாடலைக் கேட்க பதிவிறக்கம் செய்ய... ♪
அற்புத அன்பனின் அடிதொழவே
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே
இயேசுவை வணங்கிடுமே (2)
1. ஆலயமணியின் ஓசையைக் கேட்போம்
ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் (2)
ஆவியின் அருளால் அறவழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் (2)
அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம் (நாம்) - (2)
2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவன் சந்நிதி வணங்கியே நின்றோம் (2)
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் (2) அன்பினில்