குழந்தையே எங்கள் செல்வமே எம்மில் வாருமே நாளுமே எங்கள் ஜீவனில் கலந்தாட வாருமே


குழந்தையே எங்கள் செல்வமே எம்மில் வாருமே

நாளுமே எங்கள் ஜீவனில் கலந்தாட வாருமே

இதயம் உமக்குத்தானே எந்தன்

இறைவன் உமக்குத்தானே


1. மழலை சொல்லி மனதின் சுமையை மறக்க வைத்தாயே

மாசு படிந்த மனிதர் எம்மை மன்னித்து அணைத்தாயே

தேய்ந்த மனதை தேற்றியே தேவா வாருமே

நாடி வா எம்மைத் தேடி வா தேற்ற வாருமே

குழந்தை இயேசு தேவா லல்லாலலால


2. அன்பு சொல்லி அமுத சிரிப்பில் ஆனந்தம் தந்தாயே

அலையும் மனதில் அமைதி தந்து அருளை அளித்தாயே

வாடும் மனித உலகிலே வாழ்வைத் தாருமே

நாடி வா எம்மைத் தேடி வா தேற்ற வாருமே

குழந்தை இயேசு தேவா லல்லாலலால