எது வேண்டும் உனக்கு இறைவா எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எது வேண்டும் உனக்கு இறைவா - 2

எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா -2 எது வேண்டும் - 4


1. மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்

உனக்கது மணமில்லையோ

கனியாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்

உனக்கது சுவையில்லையோ

எதை நான் தருவேன் தலைவா

நீ விரும்புவதென்னவோ இறைவா

எளிய என் இதயம் தந்தேன் - 2

அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா - எது வேண்டும் - 2


2. பொருள்கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்

உனக்கது ஈடில்லையே

உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்

உனக்கது இணையில்லையே

எதை நான் தருவேன் தலைவா

நீ விரும்புவதென்னவோ இறைவா

சின்ன என் இதயம் தந்தேன் - 2

அது சிறப்பாய் இருக்குமோ இறைவா - எது வேண்டும் - 4