கண்ணே நீ கண்ணுறங்காய் மண்ணோர் பாவம் போக்கிட சிரிக்கும் செவ்விதழ் முத்தாரம் மணியாரம்


கண்ணே நீ கண்ணுறங்காய் மண்ணோர் பாவம் போக்கிட

சிரிக்கும் செவ்விதழ் முத்தாரம் மணியாரம்

காரிருளினில் கடுங்குளிரினில் பிறந்தவனே ஆராரோ


1. காவியங்கள் எழுதி வைத்த கன்னிமகன் நீயன்றோ

காலமகள் காத்திருந்தாள் கண்விழித்து வரவேற்க

பூவாடை தென்றலிலே பொன்மகனே நீயுறங்காய்

ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ


2. வானில் வெள்ளி பூத்திருக்க வேந்தர் உம்மைத் தேடி வந்தார்

வீசும் பனி இரவினிலே மாடடையில் நீ பிறந்தாய்

தேனருவி தாலாட்ட தாய்மடியில் நீ வளர்வாய்

ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ