ஆலய மணிகளே ஒலித்திடுங்கள் ஆண்டவர் பிறப்பை அறிவியுங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆலய மணிகளே ஒலித்திடுங்கள்

ஆண்டவர் பிறப்பை அறிவியுங்கள்

ஆலய கதவுகள் திறந்திடுங்கள்

மீட்பர் வந்திட வழிவிடுங்கள்


1. உலக மக்களே வந்திடுங்கள்

உண்மை இறைவனை வணங்கிடுங்கள்

மலர்கள் பலவும் கொணர்ந்திடுங்கள்

மன்னன் பாதமே தூவிடுங்கள்


2. இன்னிசை கருவிகள் மீட்டிடுங்கள்

இறைவனின் பிறப்பை முழங்கிடுங்கள்

பண்ணிசைப் பாடி மகிழ்ந்திடுங்கள்

பாலன் இயேசுவை வாழ்த்திடுங்கள் (எங்கள்)