என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு அன்பு ஆராதனை நன்றியுமென்றும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

அன்பு ஆராதனை நன்றியுமென்றும் (2)


1. பரலோகவாசிகள் அருமையாய் உம்மைப்

புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த (2)

நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ

நேசமும் அதிசய இரக்கமுமல்லோ


2. மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து

நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென (2)

ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு

பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே