தேவ ஸ்பிரீத்து சாந்துவே தேவரீர் வாரும் எமில்
மாவரப்ரசாதம் நும் மைந்தரெங்கட் கீயவே
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
1. தேவுலகில் நின்று நும் திவ்விய ப்ரகாசத்தின்
மேவு மோர் கொள் காந்தியை வேதனீர் வரவிடும்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
2. ஏதிலார்களின் பிதா வே கொடைக ளீகின்ற
வாதியே யிதயங்கட் காதபமே வாரும் நீர்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
3. ஓ உத்தமாறுதலே ஓது மாத்துமங்கட்கு
தாவில் மாதுர்ய விருந் தாடியே வாரும் எமில்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
4. பன்னும் பேரின்ப விளைப் பாற்றியே ப்ரயாசத்தில்
மன்னிடும் நன்மைச் சுக வாரணமே வாரும் நீர்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
5. வெய்யிலிற் குளிர்ச்சியே வெந்துய ரழுகையில்
துய்ய தேற்றரவே எம் தோட நீவ வாரும் நீர்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
6. பேரானந்தத்தோ டொளிர் ப்ரபையே விஸ்வாசிகள்
நாரார் ஹ்ருதய வுற்ப னங்களை நிரப்புவீர்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
7. நுந் தெய்வீக மின்றியே நொய்மை மானிடர் தமில்
நந்தன் மேவு மேதமில் லாத தொன்றுமே யிலை
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
8. தோமுறும் வாலாமையைத் தூய்மை யாக்குங் காய்ந்ததை
வாமமா நனையு நோ வைக் குணப்படுத்துவீர்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
9. காசினி மிசை வணங் காததை வணங்கிட
ஈசனீர் செயுங் குளிர் ஏற்றதைத் தண் போக்குவீர்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
10. ஆர்வின்றித் தவறிய தைச் செவ்வே நடத்திடும்
ஏர் விஸ்வாசிகட்கு நும் ஏழ் கொடையு மீகுவீர்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே
11. புண்யப் பேறியா மிவண் பொன்றும் வேளை நல்லவி
வெண்ணில் மோÑ பாக்கியம் எங்கட் கன்பி னீகுவீர்
வாரும் ஸ்பிரீத்து சாந்துவே வல்லப வநாதியே