இயேசுவே என் ராஐனே வாழ்வை வழங்க வந்தாய் தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே என் ராஐனே வாழ்வை வழங்க வந்தாய்

தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய் (2)


1. மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள்

இத்தண்ணீரைப் பருகியவன் தாகங்கொண்டான் (2)

இயேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான்

என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான்

என்று சொன்னதால் நான் வந்தேன்

நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன் வாழ்வைப் பகிர்ந்தளிப்பேன்


2. வானமும் பூமியும் அழிந்துவிடும் இறை

வார்த்தையோ ஒருநாளும் அழியாது (2)

இயேசுவே தன்னை உயர்த்துபவன் தாழ்வடைவான்

தன்னைத் தாழ்த்துவோன் உயர்வடைவான்

என்று சொன்னதால் நான் வந்தேன்

நீர் வாழ்ந்ததால் அன்பைக் கண்டேன் அன்பாய் வாழ்ந்திடுவேன்