தினம் தினம் எனில் அருள்வரம் தரும் மரியே தாய்மரியே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தினம் தினம் எனில் அருள்வரம் தரும் மரியே தாய்மரியே

வசந்தங்கள் வரும் வாழ்வினில் இன்று

உனை நான் வாழ்த்த வந்தேன் (2)


1. வானதூதர் வாழ்த்து சொல்ல வாழ்வைச் சுமந்தவளே

வாடி நின்ற மாந்தர் நெஞ்சில் வசந்தம் வீசச் செய்தாய் (2)

மனமதில் வலம்வரும் வளர்பிறையே

வழியினில் ஒளிதரும் விடிவெள்ளியே (2)

எந்தன் அருளே அழகே அன்பே

அமுதே ஆண்டவனின் தாயே


2. காலமெல்லாம் காத்திருந்த கடவுளைக் காணச்செய்தாய்

காக்கும் தேவன் கரங்களையே எம் வாழ்வில் உணர வைத்தாய்

இதயத்தில் எழுந்திடும் இறையவளே

இகமதில் சுடரென திகழ்பவளே - புது

உலகம் மலர்ந்திட புதுமைகள் புரியும் வேளையின் நாயகியே