அர்ச்சியசிஷ்ட கன்னிகையே, உம்மிடம் சம்மனசு வந்து மங்கள வார்த்தை சொன்னதினாலே அளவிடமுடியாத சந்தோஷத்தை அடைந்து அவர் வந்த காரியத்தை அறிந்து மகா தாழ்ச்சியோடே அங்கீகாரம் செய்து சர்வேசுரனை உம்முடைய திருக் கர்ப்பத்திலே பிள்ளையாகத் தரித்தீரே, சர்வேசுரனுக்கு நீர் மாதாவானீர் என்கிற சந்தோஷத்தைப் பார்த்து எங்களுக்காக மன்றாடிப் பக்தியினாலே அவரை நாங்கள் எங்கள் இருதயத்திலே எப்பொழுதும் வைத்திருக்கத் தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். பத்து அருள். ஒரு திரி.
சம்மனசுகளுக்கெல்லாம் பிரதான சம்மனசாயிருக்கிற அர்ச். மிக்கேலென் கிற சம்மன சானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாத காணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.