அத்தியந்த தயையுள்ள அர்ச். தேவமாதாவே, உம்முடைய திருக் குமாரனாகிய சேசுநாதர் அடிபட்டுச் சிலுவையிலே அறை யுண்டதுபோலே நீர் அடிபட்டுச் சிலுவையிலே அறையப்படா திருந்தாலும் அவர் தம்முடைய திருச்சரீரத்தில் அனுபவித்த வாதைகளெல்லாம் நீர் உம்முடைய மனதில் அனுபவித்தீரே, அவர் பூங்காவனத்திலே எங்கள் பாவங்களுக்காக மிகவும் துக்கப்பட்ட தினால் அவருடைய திருச் சரீரமெல்லாம் உதிர வேர்வையாக வேர்த்ததை நினைத்து நீர் திரளாய் விட்ட கண்ணீரால் தரையை நனைத்துச் சொல்லப்படாத துக்கச்சாகரத்தில் அமிழ்ந்தினீரே, அந்தத் துக்கத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற நாங்கள் செய்த பாவங்களுக்காக மிகவும் அழுது மனஸ்தாபப்பட்டுப் பாவ விமோசனம் அடையத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் - பத்து அருள். ஒரு திரி.
சம்மனசுகளுக்கெல்லாம் பிரதான சம்மனசாயிருக்கிற அர்ச். மிக்கேலென் கிற சம்மன சானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாத காணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.