1-ம் மகிமைத் தேவ இரகசியம்

உஷ்ண காலமும் குளிர் காலமும் நீங்கிப்போக வசந்த காலம் வருகிறபோது பிரசன்னமாயிருக்கிற மோட்சத்தினுடைய இராக்கினியே, உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதர் பாடுபட்டு மரித்த துக்கக் காலத்திற்குப்பின் மூன்றாம் நாள் கல்லறையை விட்டுச் செயசீலராய்ச் சூரியனிலும் அதிகப் பிரகாசமான சுப சௌந்தரிய சுடராய் உயிர்த்தெழுந்து அவரை நீர் கண்டதினாலே உமக்கு அளவற்ற மகிமை பொருந்திய சந்தோஷ காலம் வந்ததே, அந்த மகிமையைப் பார்த்து நாங்கள் பாவமாகிய மரணத்தை விட்டு ஞான விதமாய் உயிர்த்தெழுந் திருக்கத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும், - பத்து அருள். ஒரு திரி. 

சம்மனசுகளுக்கெல்லாம் பிரதான சம்மனசாயிருக்கிற அர்ச். மிக்கேலென் கிற சம்மன சானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாத காணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.