மகா இரக்கமுள்ள அர்ச். தேவமாதாவே, தேவ சுபாவத்தைக் கொண்டிருக்கிற உம்முடைய திருக்குமாரன் சேசுநாதர் கொடியோரால் துணோடிறுகக் கட்டப்பட்டு வலுவாய் அடிபட்ட தினாலே அவர் திருச் சரீர முழுதும் தழும்பும் உதிரக் காயமுமாய் நீச சேவகருடைய அசுத்த உமிழ் நீரால் அவர் திருமுகம் அழுக்கடைந்ததுமாயிருக்கிறதைக் கண்டு துக்கச் சமுத்திரத்தில் அழுந்தினீரே, அந்தத் துக்கத்தைப் பார்த்து எங்கள் பாவங்களுக்காக வருகிற கடினமான ஆக்கினைகளை எல்லாம் சர்வேசுரன் நீக்கத்தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் - பத்து அருள். ஒரு திரி.
அர்ச். கபிரியேல் என்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொளளுகிறோம். - ஒரு பர.