முழுமையும் பரிசுத்தமுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே மட்டில்லாத மகிமையும் மாறாத திருச் செயமுங்கொண்ட உம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதர் உத்தானமாயின நாற்பதாம் நாள் வானவர் அணியாகச் சூழ ஆதிபிதாக்களோடே மா-மாகிமையுடன் பரலோகத்திற்கு ஆரோகணமானதைக் கண்டு அத்தியந்த சந்தோஷ மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்து இவ்வுலகத்தில் பரதேசிகளாயிருக்கிற நாங்கள் பரலோகத்தையே வருந்தி நாடிப் பரலோகபாக்கியமான மோட்ச ஆனந்தத்தைப் பெறத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - பத்து அருள். ஒரு திரி.
அர்ச். கபிரியேல் என்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப்பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொளளுகிறோம். - ஒரு பர.