சம்மனசுகளுடைய இராக்கினியே, உமது கன்னி சுத்தத்திற்குப் பழுதில்லாமல் உலக இரட்சகரான சேசுநாதரைப் பெற்றதினாலே நீர் அனுபவித்த சந்தோஷம் எங்கள் வாக்கினாற் சொல்லி முடியாதே; அந்தச் சந்தோஷத்தைப் பார்த்துப் பாவிகளாயிருக்கிற எங்கள் இருதயத்திலே அவர் ஞான விதமாக வந்து பிறக்கத் தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். பத்து அருள். ஒரு திரி.
அர்ச். இரஃபாயேல் என்கிற சம்மனசானவரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். ஒரு பர.