பரிசுத்தக் கன்னியாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, கோயிலுக்குக் கர்த்தராயிருக்கிற உம்முடைய திவ்விய பிள்ளையைப் பெற்ற நாற்பதாம் நாள் கோயிலில் கொண்டுபோய் ஆதி பிதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து மீட்டுக் கொண்டீரே, அப்போது அவ்விடத்திலிருந்த மகாத்துமாக்கள் அவருடைய மகிமையை அறிந்து அவரை அநேக விதமாய்த் தோத்திரம் செய்ததைக் கண்டு மகா சந்தோஷப்பட்டீரே, அந்தச் சந்தோஷத்தைப் பார்த்துப் பத்தி முதலான புண்ணியங்களினாலே எங்கள் ஆத்துமம் அவருக்கு உகந்த கோயிலாயிருக்கத் தக்கதாக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். பத்து அருள். ஒரு திரி.
அப்போஸ்தலர்களுக்குள்ளே பிரதான அப்போஸ்தலர் களாயிருக்கிற அர்ச். இராயப்பரே, சின்னப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உங்களுடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உங்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். ஒரு பர.