பூசிக்கப்படத்தக்க தகுதியுடையவராயும் புண்ணிய வழிக்கு மாதிரிகையுமாயிருக்கிற அர்ச். தேவமாதாவே, உமது திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரிந்து உம்முடைய திருக்குமாரன் சேசுநாதருடைய திருக் கரம் சேர்ந்த மூன்றாம் நாள் திவ்விய சுகந்த பரிமள வாசமும் அதிப் பிரகாசமும் உடைத்தான உமது திருச் சரீரத்தோடுங்கூடக் கல்லறையை விட்டு வானோர்களுடைய பரிவாரஞ் சூழ்ந்து மதுரமான கான சங்கீதங்கள் தொனிக்கப் பரலோகத்திற்கு எழுந்தருளி அத்தியந்த சந்தோஷ மகிமை அடைந்தீரே, அந்த மகிமையைப் பார்த்துப் பூலோகம் என்கிற துக்க சாகரத்திலே மிகுந்த ஆபத்துக்குள் இருக்கிற எங்களை உமது கிருபாகடாட்சத்தினாலே நோக்கிப் பாவிகளாயிருக்கிற நாங்கள் மோட்சக்கரை ஏறத்தக்கதாக உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். - பத்து அருள். ஒரு திரி.
அப்போஸ்தலர்களுக்குள்ளே பிரதான அப்போஸ்தலர் களாயிருக்கிற அர்ச். இராயப்பரே, சின்னப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உங்களுடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உங்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.