பரலோகத்திற்கு இராக்கினியே, உம்முடைய பிள்ளையாகிய சேசுநாதருக்குப் பன்னிரண்டு வயது நடக்கிறபோது மூன்று நாள் அவரைக் காணாமல் மகா துக்கத்தோடு தேடி மூன்றாம் நாள் சாஸ்திரிகள் சபை நடுவிலே கோயிலுக்குள் அவரைக்கண்டு பரிபூரண சந்தோஷத்தை அடைந்தீரே, அந்தச் சந்தோஷத்தைப் பார்த்து நாங்கள் ஒருபோதும் பாவத்தால் அவரை விட்டுப் பிரியாமல் இருக்கச் செய்தருளும். யாதொரு காலம் அறிவின்மை யால் பாவஞ் செய்து அவரைப் பிரிந்தோமேயாகில் சீக்கிரமாகப் பச்சாத்தாபத்தினாலே அவரை அண்டி அவரிடத்திலே அடியோர்கள் ஸ்திரமாயிருக்க உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். பத்து அருள். ஒரு திரி.
அப்போஸ்தலராயிருக்கிற அர்ச். அருளப்பரே, நாங்கள் எத்தனைப் பாவிகளாயிருந்தாலும் நாங்கள் வேண்டிக்கொண்ட இந்தப் பத்து மணிச் செபத்தையும் அர்ச். தேவமாதாவின் திருப் பாதத்திலே உம்முடைய தோத்திரங்களோடேகூட ஒன்றாகக் கூட்டிப் பாதகாணிக்கையாக வைத்து உம்மைப் பிராத்தித்துக் கொள்ளுகிறோம். - ஒரு பர.