852 திருஇருதய ஆண்டவர் ஆலயம், மேலப்புதூர்

   


திருஇருதய ஆண்டவர் ஆலயம்

இடம்: மேலப்புதூர், சாத்தூர் அஞ்சல், 626201

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விருதுநகர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஒத்தையால்

பங்குத்தந்தை அருட்பணி. L. ஜெயராஜ் MSFS

குடும்பங்கள்: 105

அன்பியங்கள்: 4

1. புனித அன்னை தெரசா அன்பியம்

2. புனித சலேசியார் அன்பியம்

3. புனித இஞ்ஞாசியார் அன்பியம்

4. புனித சின்னப்பர் அன்பியம்

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணிக்கு

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி, நற்கருணை ஆசீர்

தினமும் மாலை 07:30 மணிக்கு ஜெபமாலை

திருவிழா: மே மாதம் இரண்டாம் சனிக்கிழமை

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. I. சேவியர் ஆரோக்கியசாமி, IVD

2. அருட்பணி.‌ S. மெசியா, CMF

வழித்தடம்:

சாத்தூர் -வல்லம்பட்டி 

சாத்தூர் -ஏழாயிரம்பண்ணை - நாரணாபுரம் -விலக்கு

Location map: https://maps.app.goo.gl/8dLDtbcbbAUpDdpw5

வரலாறு:

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் திருவில்லிபுத்தூர் மறைவட்டத்திற்கு உட்பட்ட ஒருபகுதியாக மேலப்புதூர் விளங்கியது. திருவில்லிபுத்தூரிலிருந்து குருக்கள், மாட்டு வண்டியில் ஊர் ஊராகச் சென்று, ஒவ்வொரு ஊரிலும் இரவு தங்கி, மறுநாள் காலையில் திருப்பலி நிறைவேற்றுவது வழக்கம். இப்படி ஊர் ஊராகச் செல்லும் போது ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மேலப்புதூர் அருகிலுள்ள ப.லெட்சுமியாபுரம் ஊரில் மண்சுவர் கொண்ட ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. 

மேலப்புதூர் ஊரிலிருந்து 4 குடும்பங்கள் மட்டுமே ப.லட்சுமியாபுரம் வந்து, திருப்பலியில் பங்கேற்று வந்துள்ளனர். இவர்கள் ஒருமுறை திருப்பலிக்கு செல்லும் போது மழையில் நனைந்து கொண்டே சென்றுள்ளனர். இதனைக் கண்ட அப்போது திருப்பலி நிறைவேற்ற வந்த ஆங்கிலேய குருவானவர், மேலப்புதூரில் ஆலயத்தின் தேவையை உணர்த்தியதால், பனை ஓலை வேய்ந்த குடிசை ஆலயம் மேலப்புதூரில் அமைக்கப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. 

காலப்போக்கில் பனை ஓலை ஆலயம் சேதமடைந்து போகவே, அதன்பின் மண் சுவர், ஓடு வேய்ந்த ஆலயம் அமைக்கப்பட்டது. அப்போது 15 குடும்பங்கள் வழிபாடுகளில் பங்கேற்று வந்தனர்.

அதன்பிறகு 1935 ஆம் ஆண்டு மீண்டும் ஆலயம் கட்டப்பட்டது.‌ 1985 ஆம் ஆண்டு ஆலய வெள்ளிவிழாவை தேர்பவனியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 

அப்போது சாத்தூர் பங்கின் கீழ் மேலப்புதூர் செயல்பட்டு வந்தது. சாத்தூர் பங்கிலிருந்து தேர் கொண்டு வரப்பட்டு திருவிழா கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு சாத்தூர் பங்கின் கிளைப் பங்கான சங்கராபுரம் ஆலய தேர் கொண்டு வரப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு ஞான ஒளிவுபுரத்தில் இருந்து தேர் வாங்கப்பட்டது. 

1999 ஆம் ஆண்டு ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு ஆலயமானது தனிப் பங்காக உயர்த்தப்பட்ட போது, மேலப்புதூர் அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

2002 ஆம் ஆண்டு புனித ஆரோக்கிய அன்னை குருசடி கட்டப்பட்டது. இதில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதி திருப்பலி நிறைவேற்றப்பட்டு, சமபந்தி விருந்து நடத்தப்பட்டு வருகிறது.

பழைய ஓடு வேய்ந்த ஆலயத்தை 2017 ஆம் ஆண்டு இடித்து விட்டு, தற்போதைய புதிய ஆலயமானது 2013 முதல் 2019 வரை பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருட்பணி. தார்சியுஸ், MSFS பணிக்காலத்தில், அவரது முழு முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு, 16.11.2018 அன்று பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மரியாயின் சேனை, புனித வின்சென்ட் தே பவுல் சபை ஆகியன சிறப்புற செயல்பட்டு வருகின்றன.

தகவல்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய பொறுப்பாளர் திரு. தேவகனி.

புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் உதவி: புல்லக்கவுண்டன்பட்டி ஆலய உபதேசியார் சசி எ சாலமோன் ராஜா.