புனித ஜெபமாலை அன்னை ஆலயம்
இடம்: வடக்கு மீனவன்குளம், பத்மநேரி அஞ்சல், 627 502
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: தேர்வுநிலை பங்கு (Quasi Parish)
கிளைப்பங்குகள்:
1. அற்புத குழந்தை இயேசு ஆலயம், தெற்கு மீனவன்குளம்
2. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல துவரைகுளம்
3. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், பொத்தைசுத்தி
4. புனித அந்தோனியார் ஆலயம், எருக்களைப்பட்டி
5. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், இடையன்குளம்
பங்குத்தந்தை அருட்பணி. M. அருள்மணி
குடும்பங்கள்: 35
ஞாயிறு திருப்பலி காலை 09:15 மணி
திருவிழா: அக்டோபர் மாதம் 07ஆம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்சகோதரி. ஆரிட் மேரி, SHS
2. அருட்பணி. கிங்ஸ்லி, தூத்துக்குடி மறைமாவட்டம்
வழித்தடம்: நாங்குநேரிக்கு மேற்கே 8கி.மீ
களக்காடு -திருநெல்வேலி வழித்தடத்தில், களக்காடிலிருந்து 15கி.மீ தொலைவில் வடக்கு மீனவன்குளம் அமைந்துள்ளது.
Location map:
வரலாறு:
இரண்டு இந்து சமய சகோதரர்கள் மீனவன்குளத்தில் ஒரு கிராமக் கோயிலைக் கட்ட முடிவு செய்தனர். அவர்கள் புனித மண்ணைப் பெறுவதற்காக தேவ நல்லூருக்கு பாத யாத்திரை சென்றனர். ஆனால், அவர்கள் திரும்பி வரும் வழியில், இளைய சகோதரருக்கு காலில் கடுமையான வலி ஏற்பட்டது. கிராமத்து மருந்தாக காலில் ‘வெற்றிலை’ கட்டி பயணத்தை தொடர்ந்தனர். கிராமத்தை அடைந்த போது, அவரது காலில் காயம் பெரிதாகி மிகுந்த வலியால் வேதனை அனுபவித்தார். அவ்வேளையில் இயேசுவிடம் பிரார்த்தனை செய்து, காயம் குணமடைந்ததால், அவர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள்.
தொடக்கத்தில் தொழுகைக் கூடமாக ஒரு சிறிய ஓலைக் குடிசையைக் கட்டினார்கள். பின்னர் கிறிஸ்தவர்கள் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, மற்றும் 1892 ஆம் ஆண்டில், அவர்கள் ஒரு வளைந்த டூம் கொண்ட ஒரு அழகிய தேவாலயத்தை கட்டினார்கள்.
புனித ஜெபமாலை அன்னையின் மர சுரூபமானது வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு, அணைக்கரை பங்கில் இருந்த குருக்களால் நிறுவப்பட்டது.
1917 ஆம் ஆண்டிலேயே திருச்சி மறைமாவட்டத்தில் பணியாற்றி, தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவருமான பேரருட்பணி. மரியதாஸ் (1885 -1965) அவர்கள் மக்களை மிகுந்த இறைவிசுவாசத்தில் வளர வழிவகை செய்தார்.
மீனவன்குளம் ஆரம்ப காலத்தில் அணைக்கரை பங்கின் கீழ் இருந்தது. அந்த நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே குருக்களின் மக்கள் சந்திப்பு இருக்கும். அணைக்கரையைச் சேர்ந்த அருட்பணியாளர்கள் கிராமத்திற்குச் சென்று ஓரிரு நாட்கள் தங்கி, அறிவுரைகள் வழங்குவதும், வழிபாடுகள் செய்வதும் வழக்கம். பின்னர் மீனவன்குளம் கிராமம் நாங்குநேரி பங்குடன் இணைக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டில், ஆலயத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. அருட்பணி. ஸ்தனிஸ்லாஸ் பாண்டியன் அவர்களால் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்பட்டது.
1985 முதல், அருட்பணி. என். எஸ். பன்னீர்செல்வம் அவர்களால் மீனவன்குளத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
1990 முதல், அருட்பணி. விங்லிங் ரவி அவர்களால், மாதம் ஒருமுறை திருப்பலி வழங்கப்பட்டது.
2000 முதல் 2002 வரை மலையன்குளத்தின் கீழ் இருந்த மீனவன்குளம் கிராமமும், தற்போதைய துணை கிராமங்களும் 2002 ஆம் ஆண்டு மீண்டும் நாங்குநேரியின் கீழ் வந்தது.
அருட்பணி. ஜேசு நசரேன் (2010-11) அவர்களால், வாரத்திற்கு ஒருமுறை திருப்பலி வழங்கப்பட்டது.
மீனவன்குளம் 2015 ஆம் ஆண்டு தேர்வுநிலை பங்காக (Quasi Parish) மாற்றப்பட்டது. அருட்பணி. டென்சில் ராஜா (2015-2019) அவர்கள் தேர்வுநிலை பங்கின் முதல் பங்குப்பணியாளராக நியமிக்கப்பட்டார். இவ்வேளையில் 40 இலட்சம் ரூபாய் செலவில் தேவாலயம் புனரமைக்கப்பட்டதுடன், புனரமைக்கப்பட்ட தேவாலயத்தை மேதகு ஆயர் ஸ்டீபன் ஆண்டனி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்.
தொடர்ந்து அருட்பணி. விக்டர் சாலமன் (2019-20) மற்றும் அருட்பணி. சகாய ஜஸ்டின் (2020-21) ஆகியோர் பொறுப்பேற்று வழிநடத்தினர்.
தற்போது 2021 ஆம் ஆண்டு முதல் அருட்பணி. M. அருள்மணி அவர்கள் பொறுப்பேற்று, மீனவன்குளம் தேர்வுநிலை பங்கு மற்றும் அதன் கீழ் வருகிற கிளைப் பங்குகளின் வளர்ச்சிக்காக பணிசெய்து வருகின்றார்.
ஆர்.சி. தொடக்கப் பள்ளி 1910 ஆம் ஆண்டில் திறந்தவெளிப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டுவாக்கில், திரு. இராஜேந்திரன் என்ற ஆசிரியரின் முயற்சியால் பள்ளி மூன்றாம் வகுப்பு வரை ஓலைக் குடிசையில் இயங்கத் தொடங்கியது. நாளடைவில் ஐந்தாம் வகுப்பு வரை ஓடுகள் வேயப்பட்ட சிறிய கட்டிடத்தில் பள்ளி இயங்கத் தொடங்கியது.
அருட்பணி. ஆர்தர் ஜேம்ஸ் அவர்கள் 1978 ஆம் ஆண்டு கூடுதல் டைல்ஸ் கட்டிடம் கட்ட முயற்சி எடுத்து தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தினார். இக்காலத்தில் திரு. புஷ்பராஜ், திரு. சவரி முத்து போன்ற ஆசிரியர்களின் சேவை பாராட்டத்தக்கது.
அருட்பணி. ஜெரோசின் அ. கற்றார் அவர்களால் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளை தொடங்கி புனித தெரசா உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினார்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அருள்மணி அவர்கள்.