854 குழந்தை இயேசு ஆலயம், தெற்கு மீனவன்குளம்

  


குழந்தை இயேசு ஆலயம்

இடம்: தெற்கு மீனவன்குளம், பத்மநேரி அஞ்சல், 627502

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெபமாலை அன்னை ஆலயம், வடக்கு மீனவன்குளம்

பங்குத்தந்தை அருட்பணி. M. அருள்மணி

குடும்பங்கள்: 15

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:15 மணிக்கு திருப்பலி

திருவிழா: செப்டம்பர் மாதத்தில்

வழித்தடம்:

களக்காடு திருநெல்வேலி வழித்தடத்தில், களக்காட்டிலிருந்து 15கி.மீ தொலைவில் மீனவன்குளம் அமைந்துள்ளது.

Location map:

https://g.co/kgs/m1HHSD

வரலாறு:

கூத்தன்குழியைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்க குடும்பங்கள், மீனவன்குளத்தில் உள்ள பெரிய குளத்தில் மீன்பிடித்தலின் காரணமாக மீனவன்குளத்தில் (தெற்கு) குடியேறினர்.  இக்குடும்பங்கள் மீனவன்குளத்தில் மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வந்தனர்.  வருடங்கள் கடந்த நிலையில், பஞ்சாயத்து மூலம் குளத்தில் உள்ள மீன்கள் ஏலத்தில் விடப்பட்டதால், மீன் வியாபாரம் லாபகரமாக இல்லை என இவர்கள் கண்டனர். இதனால், அவர்கள் வேறு வேலைகளுக்கு செல்லத் தொடங்கவே, கிராமத்தில் கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

இந்த கிராமத்தில் உள்ள பரதவ குடும்பங்களுக்கு 1989 ஆம் ஆண்டு வரை ஆலயம் இல்லை. இவர்கள் வடக்கு மீனவன்குளத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா தேவாலயத்தில் வழிபாடுகளுக்கு சென்று வந்தனர். 

1989 ஆம் ஆண்டில், அருட்பணி. N. S. பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு சிறிய இயேசுவின் திருஇருதய ஆலயத்தைக் கட்ட உதவினார். அது நாங்குநேரி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.   செப்டம்பர் மாதத்தில் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது தெற்கு மீனவன்குளத்தில் 6 குடும்பங்கள் இருந்தன.  

1999 ஆம் ஆண்டில், அருட்பணி. ஜெரோசின் அ. கற்றார் அவர்களால் ஆலயத்தை கான்கிரீட் கூரையாக மாற்றம் செய்து, ஒரு குழந்தை இயேசு சுரூபத்தை நிறுவினார். அது முதல் இவ்வாலயம் குழந்தை இயேசு தேவாலயம் என்று பெயர் பெற்றது.  

இருப்பினும், திருவிழாவானது முன்னர் கொண்டாடி வந்த வழக்கப்படி செப்டம்பர் மாதத்திலேயே கொண்டாடப்பட்டு வருகிறது .

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அசன விருந்து வைத்து கொண்டாடி வருகின்றனர். அவ்வேளையில் அனைத்து குடும்பங்களும் ஒன்று சேர்ந்து விழாவை சிறப்பு செய்கின்றனர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அருள்மணி அவர்கள்.