855 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், இடையன்குளம்

  


புனித ஆரோக்கிய மாதா ஆலயம்

இடம்: இடையன்குளம், பத்மநேரி வழி, இடையன்குளம் அஞ்சல்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெபமாலை அன்னை ஆலயம், வடக்கு மீனவன்குளம்

பங்குத்தந்தை அருட்பணி.‌ M. அருள்மணி

குடும்பங்கள்: 5

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி நடைபெறும்

வழித்தடம்: களக்காடு To சேரன்மகாதேவி வழி இடையன்குளம்

வரலாறு:

இடையன்குளம் ஊரைச் சேர்ந்த இறைமக்கள் 2000 ஆம் ஆண்டு வரை எருக்கலைப்பட்டியில் உள்ள ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் பங்கேற்று வந்தனர்.

அருட்பணி. ஜெரோசின் அ.கற்றார் அவர்கள் திரு. ராஜா பெர்னாண்டோ அவர்களின் நிலத்தை ஆலயம் அமைக்க நன்கொடையாக பெற்றுக் கொண்டு, 1998 ஆம் ஆண்டு தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தை கட்டும் பணியைத் தொடங்கினார். ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 2000 ஆம் ஆண்டில் அர்ச்சிக்கப்பட்டது. 

தற்போது வடக்கு மீனவன்குளம் தேர்வுநிலை பங்கின் கீழ் இடையன்குளம் செயல்பட்டு வருகிறது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. அருள்மணி அவர்கள்.