புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: சின்னக்கண்ணுபுரம், மீளவிட்டான் சாலை, தூத்துக்குடி, 628002
மாவட்டம்: தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: தூத்துக்குடி
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித ரீத்தம்மாள் ஆலயம், ரீத்தம்மாள்புரம்
பங்குப்பணியாளர் அருட்பணி. ஆரோக்கியம்
குடும்பங்கள்: 51
அன்பியங்கள்: 3
ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி
செவ்வாய்க்கிழமை திருப்பலி மாலை 06:30 மணி
திருவிழா : ஜனவரி மாதத்தில்
வரலாறு:
1950 களில் பனைத் தொழில் செய்வதற்காக தமிழகத்தின் தென்பகுதி கிராமங்களிலிருந்து குறிப்பாக சி.சவேரியார்புரம், கடகுளம், மிட்டாதார்குளம், சில்பாடு சவேரியார்புரம், காமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த மக்கள் சின்னக்கண்ணுபுரம் பகுதியில் ஒருசில முதலாளிகளால் குடியமர்த்தப்பட்டார்கள்.
இவர்களை குடியமர்த்திய முதலாளிகளே இவர்களுக்கான வழிபாட்டு இடம், கல்லறைக்கான இடம் என வழங்கினார்கள். 1984 ஆம் ஆண்டு புனித அந்தோனியாருக்காக ஒரு ஆலயம் கட்டப்பட்டது.
1992 ஆம் ஆண்டு அண்ணாநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் பங்கானபோது, சின்னக்கண்ணுபுரம் அதன் கிளைப் பங்காக ஆனது.
அதனைத் தொடர்ந்து புதிய கொடிமரமும், புனித அந்தோனியார் கெபியும், அருள்தந்தை மிக்கேல் ஜெகதிஸ் (2001-2006) அவர்களின் முயற்சியாலும், மக்களின் முயற்சியாலும் கட்டப்பட்டது.
அண்ணாநகர் பங்குத்தந்தை அருட்பணி. ஜான் பென்சன் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
22.05.2018 அன்று ரீத்தம்மாள்புரம் தனிப் பங்காக உயர்த்தப்பட்ட போது, சின்னக்கண்ணுபுரம் ஆலயமானது, ரீத்தம்மாள்புரத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
ரீத்தம்மாள்புரம் பங்கின் பங்குத்தந்தையர்கள் வழிகாட்டலில், ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது சின்னக்கண்ணுபுரம் இறைசமூகம்.
Location map: https://maps.app.goo.gl/fyFF1K5TPDtWVjVP6
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியம் அவர்கள்.