தூய வியாகுல அன்னை ஆலயம்
இடம்: திண்டிவனம்
மாவட்டம்: விழுப்புரம்
மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: திண்டிவனம்
பங்குத்தந்தை: அருட்பணி. D. சவரிமுத்து
உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஆ. லாரன்ஸ், SJ
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோனியார் ஆலயம், பிரகாசபுரம் திண்டிவனம்
2. குழந்தை இயேசு ஆலயம், கூட்டேரிப்பட்டு
3. தூய லூர்து அன்னை ஆலயம், பெரமண்டூர்
4. தூய சகாய அன்னை ஆலயம், பந்தமங்களம்
5. தூய சகாய அன்னை ஆலயம், ஆலகிராமம்
6. தூய சகாய அன்னை ஆலயம், வெளியனூர்
7. தூய சகாய அன்னை ஆலயம், வேம்பூண்டி
8. தூய இருதய ஆண்டவர் ஆலயம், ஏவளூர்
9. அன்னை வேளாங்கண்ணி ஆலயம், புறங்கரை
10. தூய சகாய அன்னை ஆலயம், கூச்சிக்கொளத்தூர்
11. தூய சவேரியார் ஆலயம், சாரல்
12. தூய சகாய அன்னை ஆலயம், ஒலக்கூர்
13. தூய பாத்திமா அன்னை ஆலயம், நெய்க்குப்பி
14. தூய சூசையப்பர் ஆலயம், கல்பாக்கம்
15. தூய இருதய ஆண்டவர் ஆலயம், திருவக்கரை
16. தூய இருதய ஆண்டவர் ஆலயம், இருதயபுரம்
ஆலயம் இல்லாத கிளைப்பங்குகள்:
1. வடசிறுவளூர்
2. பெரும்பாக்கம்
3. அம்புழுக்கை நகர்
4. பெரிய அண்டப்பட்டு
5. கொள்ளார்
6. சின்ன நெற்குணம்
7. ஆத்தூர்
8. கீழ்பசார்
9. தென்பசார்
10. சிங்கனூர்.
குடும்பங்கள்: 560 (கிளைப் பங்குகள் சேர்த்து 900+)
திரு வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி மாலை 06:00 மணி
வாரநாட்களில் காலை 05:30 மணி நற்கருணை ஆசீர், காலை 06:00 மணி திருப்பலி
சனிக்கிழமை மாலை 06:00 மணி திருப்பலி
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06:00 மணி தேர்பவனி, நவநாள் திருப்பலி
திருவிழா:
செப்டம்பர் 06-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 15-ஆம் தேதி திருவிழா
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. பெர்க்மான்ஸ்
2. அருட்பணி. பிரான்சிஸ், ஜான்சி மறைமாவட்டம்
3. அருட்பணி. லியோ, வட இந்தியா
4. அருட்பணி. குமார், குவனெலியன் (கிளைப்பங்கு)
5. அருட்பணி. ஜெரோம் சுதீப், SDB
6. Dn. ஜோசப், SDB
வரலாறு:
கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டில் அணிலாடியை மையமாகக் கொண்டு அருள்தந்தை. புர்காத் (Fourcade) பணியாற்றிக் கொண்டிருந்தார். 1876 ஆம் ஆண்டு அருள்தந்தை. போரே அடிகளார் அணிலாடி சென்று புர்காத் அடிகளாரோடு திண்டிவனம் வந்தார். பின்னர் புர்காத் அடிகளாரின் ஆலோசனையின்படி 1877 ஆம் ஆண்டு திண்டிவனம் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டது.
அருள்தந்தை. போரே அடிகளார் பொறுப்பேற்ற திண்டிவனம் பங்கானது, மேற்கே செஞ்சி முதல், கிழக்கே புதுச்சேரி சாலையில் உள்ள புளிச்சப்பள்ளம் வரை பரவியிருந்தது.
1878 ஆம் ஆண்டு அருள்தந்தை. பிளேரி அடிகளார் திண்டிவனம் பங்கு ஆலய வளாகத்தை வாங்கி, ஒரு சிறிய கூரைக்கோயில் கட்டினார். 1898 ஆம் ஆண்டு அருட்தந்தை. கோம்ப் அடிகளார் புதிய ஆலயம் கட்ட அடித்தளமிட்டார். ஆனால் அன்று நிலவிய கடும் பஞ்சம், கொள்ளை நோய்கள் இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுதல், ஆதரவற்ற சிறார் இல்லங்கள், தொடக்கப்பள்ளி, தொழிற்பள்ளி, மருத்துவமனை, கிராமங்களில் நற்செய்திப் பணி ஆகியவற்றை கவனிக்க வேண்டிய நிலையில் புதிய ஆலயப் பணிகள் முடங்கிப் போயின.
1912 இல் பங்குப்பணியாளர் அருள்தந்தை. சின்னப்பநாதர் என்று அழைக்கப்பட்ட அருட்பணி. ழியேர் அடிகளார் ஆலய கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கி, மக்களோடு மக்களாக கட்டுமான வேலையில் ஈடுபட்டு, ஆலய கோர்னஸ் வரை சுவர் எழுப்பப்பட்டது.
பின்னர் அருட்பணி. ழியேர் அடிகளாரின் திடீர் மரணத்தாலும் (24.07.1914), 1914-1918 வரை நடைபெற்ற முதல் உலகப்போர் காரணமாகவும், நிதி பற்றாக்குறையினாலும் கட்டிடப் பணிகள் மீண்டும் முடங்கின.
1921 இல் திண்டி கத்தோலிக்க நடுநிலையத்தை நிறுவிய அருட்தந்தை. டஃபி அடிகளார், 1923 ஆம் ஆண்டு பங்கின் பொறுப்பேற்ற அருட்தந்தை. கோலாஸ் அடிகளார் ஆகிய மாமேதைகளின் அயரா முயற்சியால் 1925 ஆம் ஆண்டில் ஆலயப் பணிகள் மீண்டும் தொடரப்பட்டு, அழகிய கலைநுட்பங்களுடனும், எழில்மிகு தோற்றத்துடன் கட்டி முடிக்கப்பட்டு, 08.09.1925 அன்று தேவமாதாவின் பிறப்புப் பெருவிழா நாளில் திண்டிவனம் பங்கின் நிறுவனர் அருள்தந்தை. போரே அடிகளாரின் திருக்கரங்களால் அருள்பொழிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்களின் சீரிய முயற்சியால், திண்டிவனம் பங்கு பல்வேறு நிறுவனங்கள் நிறைந்த சிறந்த பங்காக திகழ்ந்து வருகிறது.
பங்கில் உள்ள கெபி& குருசடி:
தூய லூர்து மாதா கெபி
தூய வியாகுல மாதா குருசடி.
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:
1. பங்குப் பேரவை
2. நிதிக்குழு
3. மரியாயின் சேனை (3)
4. மறைக்கல்வி
5. பாடகற்குழு
6. இளைஞர் இயக்கம்
7. நற்செய்தி பணிக்குழுக்கள் (4)
8. திருவழிபாட்டுக் குழு
பங்கின் கல்வி நிறுவனங்கள்:
1. ஆர்.சி தொடக்கப்பள்ளி, திண்டிவனம்
2. ஆர்.சி தொடக்கப்பள்ளி, கூச்சிக்கொளத்தூர்.
வழித்தடம்: திண்டிவனம் பேருந்து நிலையம் அருகில்.
Location map: https://g.co/kgs/T2yyN4
தகவல்கள் பங்குத்தந்தை அருட்பணி. D. சவரிமுத்து அவர்கள்.
ஆலய புகைப்படங்கள் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. லாரன்ஸ், SJ அவர்கள்.