தூய விண்ணரசி அன்னை ஆலயம்
இடம்: கோபசந்திரம், தளி அஞ்சல், தேன்கனிக்கோட்டை தாலுகா
மாவட்டம்: கிருஷ்ணகிரி
மறைமாவட்டம்: தருமபுரி
மறைவட்டம்: தேன்கனிக்கோட்டை
நிலை: மறைப்பணித்தளம் (Quasi Parish)
பங்குத்தந்தை அருட்பணி. A. போஸ்கோ மதலைமுத்து
குடும்பங்கள்: 17
ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி
வாரநாட்களில் திருப்பலி மாலை 07:00 மணி
திருவிழா: ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி
வழித்தடம்: ஓசூர் -தளி வழித்தடத்தில், கும்மளாபுரம் கூட்ரோடு. இங்கிருந்து வலதுபுறமாக சென்றால் கோபசந்திரத்தை வந்தடையலாம்.
Location map: https://g.co/kgs/BB98iJ
வரலாறு:
கோபசந்திரம் ஊரில் நீண்ட காலமாக கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வந்தனர். மதகொண்டபள்ளி பங்கின் கீழ் கோபசந்திரம் செயல்பட்டு வந்தது. இம்மக்களின் ஆன்மீகத் தேவைக்காக 1937 ஆம் ஆண்டு 0.65 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, சிற்றாலயம் கட்டப்பட்டது.
மதகொண்டபள்ளி பங்குத்தந்தை அருட்பணி. J. ஆரோக்கியசாமி பணிக்காலத்தில் பழைய ஆலயம் அகற்றப்பட்டு, தற்போதுள்ள ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, அருட்பணி. S. ஜேசுதாஸ் அவர்களால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, மேதகு ஆயர். Dr. லாரன்ஸ் பயஸ், D.D., 13.01.2014 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
மதகொண்டபள்ளியின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த கோபசந்திரமானது மறைப்பணித்தளமாக (Quasi Parish) மாற்றப்பட்டு, அருட்பணி. இராஜப்பா அவர்கள் 22.08.2020 அன்று, மறைப்பணித்தள பொறுப்பாளராக மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் பணியில் அமர்த்தப்பட்டார். பொறுப்பேற்று ஓராண்டு காலம் சிறப்புற வழிநடத்தியபின் 06.07.2021 அன்று பணிமாற்றம் பெற்றுச் சென்றார்.
தற்போது அருட்பணி. போஸ்கோ மதலைமுத்து அவர்கள், 06.07.2021 அன்று பொறுப்பேற்று கோபசந்திரம் மறைப்பணித்தளத்தை வழிநடத்தி வருகின்றார்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. போஸ்கோ மதலைமுத்து அவர்கள்.
கூடுதல் புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ், கிருஷ்ணகிரி.