875 புனித அந்தோனியார் ஆலயம், கரிமேடு

        


புனித அந்தோணியார் ஆலயம்

இடம்: கரிமேடு, காவல்நிலையம் எதிர்ப்புறம்

மாவட்டம்: மதுரை

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: மதுரை தெற்கு

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித வளனார் ஆலயம், ஞானஒளிவுபுரம்

பங்குத்தந்தை: அருட்பணி. A. ஜோசப்

உதவி பங்குத்தந்தை: அருட்பணி. சின்னத்துரை

குடும்பங்கள்: 180

அன்பியங்கள்: 4

வழிபாட்டு நேரங்கள்: 

செவ்வாய்க்கிழமை மாலை 06:00 மணிக்கு ஜெபமாலை தொடர்ந்து திருப்பலி

தினமும் காலையும், மாலையும் ஜெபமாலை நடைபெறும்

வியாழக்கிழமை மாலை மீட்பரின் நற்செய்தி குழுவினரால் ஜெபவழிபாடு நடைபெறும்.

திருவிழா: ஜூன் மாதம் முதல் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, இரண்டாவது சனிக்கிழமை மாலை மின்ரத பவனியும், ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கம், திங்கட்கிழமை அன்னதானம்.

வழித்தடம்: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, 1கி.மீ தொலைவில் கரிமேடு உள்ளது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து 77B. மில்கேட் ஸ்டாப் இறங்கி, 500மீட்டர் தூரத்தில் ஆலயம் உள்ளது.

Location map: https://maps.app.goo.gl/ESaWDcsRfuCF3NCL6

வரலாறு:

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மேட்டுப்பட்டியைத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்த 96 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிழைப்பிற்காக, பல்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து சென்றனர்.

அப்படி பிரிந்து சென்ற கிராமங்களில் மேட்டுப்பட்டி, தாடிக்கொம்பு, உலகம்பட்டி, வக்கம்பட்டி போன்ற கிராமங்களில் வாழ்ந்த சுமார் 300 குடும்பங்களில் சில குடும்பங்கள் கரிமேட்டில் வந்து தங்களின் வாழ்க்கையைத் தொடங்கினர்.

ஆண்களும், பெண்களும்  ஹார்வி மில்லில் வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்த தொடங்கினர். ஹார்வி மில்வேலை, சுண்ணாம்புத் தொழில், வண்ணம் பூசுதல், நிலக்கரியைப் பிரித்தெடுத்தல் போன்ற தொழில்கள் இவர்களின் முக்கியத் தொழில்களாக மாறின. தற்போது மீன் வியாபாரம் முக்கியத் தொழிலாக உள்ளது.

சில ஆண்டுகளுக்குப் பின்பு தாங்கள் கரிமேட்டில் வந்து முதன்முதலில் குடிசை அமைத்து வாழ்ந்த இடத்தின் உரிமையாளர் நாகப்பிள்ளை என்பவரிடம், 500 ரூபாய் கொடுத்து இடத்தை வாங்கி வாழ ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் கரிமேட்டிலிருந்து 500மீட்டர் தொலைவில் உள்ள, முரட்டுபத்திரி என்ற பகுதியில் குடிசையிலிருந்த புனித அந்தோனியார் சுரூபத்தை வணங்கத் தொடங்கி ஆன்மீகத்தில் வளர்ந்தனர்.

காலப்போக்கில் மக்கள் முரட்டுப்பத்திரியில் இருந்த புனித அந்தோனியார் சுரூபத்தை எடுத்து வந்து, கரிமேட்டில் குடிசை அமைத்து வழிபட ஆரம்பித்தனர். பின்பு 1941 வரை இம்மக்களுக்குத் தேவையான ஆன்மீக காரியங்களை மரியன்னை முதன்மைக் கோயிலில் இருந்த குருக்கள் வழங்கி வந்தனர். 

1941-46 வரை இம்மக்களை ஜெபமாலை அன்னை கோயிலில் உள்ள குருக்கள் ஆன்மீகத்தில் வளர்த்தனர். அதன்பின்பு 1947- 1959 வரை இம்மக்கள் ரயில்வே காலனி பங்குத்தந்தையர்களால் ஆன்மீகத்தில் வளர்க்கப்பட்டனர்.

பின்னர் 1972 ஆம் ஆண்டு ஞானஒளிவுபுரத்தின் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. T. A. சூசை அவர்களால், மக்களிடம் தலா 20 ரூபாய் வரி பெற்று, கரிமேடு மக்களுக்காக சிமெண்ட் கூரையிலான ஆலயம் கட்டப்பட்டது. 

2002 ஆம் ஆண்டு அருட்பணியாளர் எஸ்.எம். செல்வராஜ் அவர்களின் தலைமையில் ஆலயத்தின் முன்புறம் நன்கொடையாளர்  உதவியுடன் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அருட்பணியாளர் எட்வின் சகாயராஜ் பணிக்காலத்தில் 2015 ஆம் ஆண்டில் தற்போதுள்ள புதிய ஆலயம் கட்டப்பட்டது. முரட்டுப்பத்திரியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித அந்தோனியார் சுரூபமானது பலிபீடத்தின் மேற்பகுதியில் நிறுவப்பட்டது.

2022ஆம் அருட்பணி. செபாஸ்டின் அவர்களின் வழிகாட்டலில் இறைமக்களின் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள், ஆலயத்தில் இடிதாங்கி, ஜெனரேட்டர், ஆலயம் முழுமைக்கும் வண்ணம் தீட்டுதல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டன‌.

தற்போது ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களால் 17.02.2023 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

தொடக்கத்திலிருந்து இன்றுவரை கரிமேட்டின் பாதுகாவலரான புனித அந்தோனியாரின் பாதுகாப்பில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அந்தோனியார் நவநாளைக் கொண்டாடுகின்றனர். தினமும் மக்கள் அதிகாலையில் ஒன்றாகக் கூடி இறைவேண்டலும், செபமாலையும் செய்து

வருகின்றனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தைகளுக்கு ஞாயிறு மறைக்கல்வி நடத்தப்பட்டு வருகின்றது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மீட்பரின் நற்செய்தி குழு

2. மரியாயின் சேனை

3. புனித அந்தோனியார் இளைஞரணி 

4. அன்பியங்கள்

5. ஞாயிறு மறைக்கல்வி

கேட்கும் வரங்களை பெற்றுச் செல்ல... கோடி அற்புதரின் ஆலயமாம்.. கரிமேடு புனித அந்தோனியார் ஆலயம் வாருங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய நிர்வாகிகள்