884 புனித வனத்து சின்னப்பர் ஆலயம் புனித சவேரியார் ஆலயம், மேலநெடுவாய்

    


புனித வனத்து சின்னப்பர் ஆலயம் & புனித சவேரியார் ஆலயம்

இடம்: மேலநெடுவாய், ஆண்டிமடம் அஞ்சல்

மாவட்டம்: அரியலூர்

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: ஜெயங்கொண்டம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம், ஆண்டிமடம்

பங்குத்தந்தை அருட்பணி. மரிய ஜோமிக்ஸ் சாவியோ

குடும்பங்கள்: 130

மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி (புனித வனத்து சின்னப்பர் ஆலயம்)

மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி (புனித சவேரியார் ஆலயம்) 

செவ்வாய் மாலை 06:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி (புனித சவேரியார் ஆலயம்)

திருவிழா: 

மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (புனித சவேரியார் ஆலயம்)

ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (புனித வனத்து சின்னப்பர் ஆலயம்)

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Fr. Gnanathikam (late)

2. Fr. A. R. Chinnappan 

3. Fr. Adaikalam, SDC 

4. Fr. Anand, SDB

5. Sr. Raphael, SSAM

6. Sr. Sagaya Rani, SSAM 

7. Sr. Priya Princy, FIHM

வழித்தடம்: ஆண்டிமடம் -செந்துறை சாலையில், ஆண்டிமடத்திலிருந்து சுமார் 3கி.மீ தொலைவில் மேலநெடுவாய் அமைந்துள்ளது.

Location map: Melaneduvai

https://maps.app.goo.gl/QCxNLnrQ1hKU9c96A

வரலாறு:

புனித வனத்து சின்னப்பர் ஆலயம்:

1900 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் மேலநெடுவாய் முழுவதும் காட்டுப் பகுதியாக இருந்தது. மொத்த பரப்பளவு 300 ஏக்கர். காடு வெட்டி நிலத்தை பிரிக்கின்றபோது, 150 ஏக்கர் கத்தோலிக்க திருச்சபை மக்களுக்கும், 150 ஏக்கர் T.L.C கிறிஸ்தவ ஆயருக்கும் பிரித்து கொடுக்கப் பட்டது. 

அதன்பிறகு 1900-ல் பொது சர்வே எடுக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபைக்கு கொடுக்கப்பட்ட 150 ஏக்கரும், அந்த இடத்தில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஊரின் கடைசிப் பகுதியில் சிலுவை வைத்து மக்கள் வழிபட ஆரம்பித்தனர். அருட்தந்தை ஞானாதிக்கம் அவர்களின் தகப்பனார் திரு. பெரியநாயகம் அவர்களின் தலைமையில் இங்கு வாழ்கின்ற மக்கள் அனைவரும் குடியேறினர். அதன்பின்பு வன விலங்குகள் தொந்தரவு அதிகமானதால் வனக்காப்பாளரான புனித வனத்து சின்னப்பர் பெயரில்,  அருட்தந்தை குழந்தைசாமி அவர்களால், 1950- ஆம் ஆண்டு களத்துவேட்ட என்ற இடத்தில் ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 

ஆலயமானது ஊருக்கு ஒதுக்கு புறமாக வருவதால், ஊருக்கு ஒருபுறத்தில் கட்டலாம் என்று ஊர்மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்தனர். அதன்பிறகு தற்போது உள்ள புனித சவேரியார் ஆலயம் இருக்கும் இடத்தில் ஆலயம் கட்டலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் ஆலயம் கட்ட முடியவில்டிலை. 

அதன்பிறகு மேலத்தெருவில் சுமார் 1.25 ஏக்கர் அளவில் அருட்தந்தை ஞானாதிக்கம் அவர்கள் மக்களுக்கு 1966 ல் நிலத்தை வாங்கிக்கொடுத்து, முதன்முதலில் கான்கிரீட் ஆலயம் கட்டி கொடுத்து வழிபாடு நடத்த உதவி செய்தார். அவர் கட்டிக் கொடுத்த ஆலயம் பழுது அடைந்த நிலையில் இருந்ததால்  மேலநெடுவாயில் புதிய ஆலயம் கட்டுவதற்கு, சுற்றியுள்ளவர்களிடம் பேசி இந்த இடமானது வாங்கப்பட்டது. அருட்தந்தை ஞானாதிக்கம் அவர்களால் 1972 ஆம் ஆண்டு இந்த இடத்தில் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது.

மேலநெடுவாய் முதன்முதலில் கூவத்தூர் பங்குடன் இணைந்து இருந்தது. அதன்பிறகு ஆண்டிமடம் 1997-ல் தனி பங்காக பிரிக்கப்பட்ட போது, புனித வனத்து சின்னப்பர் ஆலயம், ஆண்டிமடத்துடன் இணைக்கப்பட்டது. 

புனித வனத்து சின்னப்பர் ஆலயம் பெரிய ஆலயமாக கட்ட முடிவெடுக்கப்பட்டு, அருட்தந்தை A.R. சின்னப்பன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 100 அடி நீளம் 28 அடி அகலம் கொண்ட புதிய ஆலயம் கட்டப்பட்டு, 25.01.2014 அன்று மேதகு ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

புனித சவேரியார் ஆலயம்:

1960-லிருந்து கூவத்தூர் பங்கின் கிளைப்பங்காக உருவான சவேரியார் ஆலயம் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள மேலநெடுவாயின் மையப் பகுதியில் ஓலைக்கூரை ஆலயமாக கட்டப்பட்டது. அதைச் சுற்றி கள்ளிவேலியும், முன்புறம் மூன்று ஆலமரங்களும் இருந்தது. இந்த கூரைக் கட்டிடத்தில் ஆரம்பப் பள்ளியும் நடந்து கொண்டு இருந்தது. 

பின்னர் தற்போது உள்ள புதிய ஆலயம் கட்டப்பட்டது.

இவ்விரண்டு ஆலயங்களும் ஆண்டிமடம் பங்கின் கீழ், பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகின்றன...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குப்பணியாளர் அருள்பணி. மரிய ஜோமிக்ஸ் சாவியோ அவர்கள்.