தூய சகாய மாதா ஆலயம்
இடம்: சகாயநகர், கோயில் தெரு, நாங்குநேரி தாலுகா, ஏமன்குளம் அஞ்சல்
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: கிறிஸ்து அரசர் ஆலயம், நாங்குநேரி
பங்குத்தந்தை அருட்பணி. டென்சில் ராஜா
குடும்பங்கள்: 20
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி
மாதத்தின் முதல் புதன் மாலையில் சப்பரபவனி, 07:00 மணி திருப்பலி தொடர்ந்து அசனம்
திருவிழா: மே மாதம் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை.
வழித்தடம்: நாங்குநேரி -திசையன்விளை வழித்தடத்தில், நாங்குநேரியிலிருந்து 5கி.மீ தொலைவில் சகாயநகர் அமைந்துள்ளது.
Location map:
https://maps.app.goo.gl/FVQoVaYAyB5PhnmTA
வரலாறு:
நடுக்காரங்காடு ஊரில் வசித்து வந்த ஐந்து குடும்பத்தினர், 2000 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி கீழ காரங்காட்டைச் சேர்ந்த திரு. அரிமுத்து கோனார் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் நாங்குநேரி பங்குத்தந்தை அருட்பணி. ஜெரால்டு அவர்களின் முயற்சியால் ஹபித்தார் நிறுவனம் கொடுத்த கடன் மூலமாக 9 வீடுகள் கட்டி குடியேறினர்.
இறைவனை வழிபட ஆலயம் தேவை என்பதை உணர்ந்து 20 சென்ட் நிலத்தை விலைக்கும், 20 சென்ட் நிலமானது நில உரிமையாளர் திரு. அரிமுத்து கோனாரும் வழங்கிட இந்த 40 சென்ட் நிலத்தில் ஓலைக் குடிசையில் தூய சகாய மாதா ஆலயம் கட்டப்பட்டது. அதுமுதல் இவ்வூர் சகாயநகர் என அழைக்கப்படுகிறது.
அருட்பணி. நார்பர்ட் தாமஸ் அவர்களின் முயற்சி மற்றும் நிதிபங்களிப்புடன் தற்போதைய ஆலயத்திற்கு 31.07.2002 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, இத்துடன் ஆலயத்தைச் சுற்றிலும் மதிற்சுவர், குருக்கள் தங்குவதற்கு ஒரு அறைவீடு ஆகியன கட்டப்பட்டு, 25.05.2003 அன்று ஆயர் பதிலாள் மேதகு ஜோசப் சேவியர், DCL அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தொடர்ந்து பணிபுரிந்த அருட்பணி. ஜேசு நசரேன் அவர்கள் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றத் தொடங்கினார். அதுமுதல் இன்றுவரை ஞாயிறு காலை 06:00 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது.
பங்குத்தந்தை அருட்பணி. டென்சில் ராஜா அவர்களின் முயற்சியால், 2020 ஆம் ஆண்டு மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்கள் சகாயநகர் வந்து, மக்களுக்கு ஆசி வழங்கிச் சென்றார்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள்.