திருஇருதய ஆண்டவர் ஆலயம்
இடம்: அருளகம், மொரப்பூர் சாலை, அரூர், 636903
மாவட்டம் : தருமபுரி
மறை மாவட்டம் : தருமபுரி
மறைவட்டம் : அரூர்
நிலை : பங்குத்தளம்
கிளைப் பங்கு:
புனித அந்தோனியார் ஆலயம், நாதியானூர்
பங்குதந்தை: அருட்பணி. வி. ஜான் மைக்கேல், SJ
குடும்பங்கள் : 268
அன்பியங்கள் : 18
பங்குத் திருவிழா: ஜூன் இரண்டாம் வாரம்
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருட்பணி. பெலிக்ஸ், ச.ச.
2. அருட்பணி. மைக்கேல் ராஜ், தருமபுரி மறைமாவட்டம்
3. அருட்சகோதரி. ஆரோக்கிய மேரி கீர்த்தனா, தூய அன்னாள் சபை, சென்னை
வழித்தடம் : மொரப்பூர் சாலையில், அரசு மருத்துவமனைக்கு எதிரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Map: https://maps.app.goo.gl/6AYwNeH7o2cLstnm8
360° View: https://maps.app.goo.gl/XjJRL12qxZuvw55y9
வரலாறு:
புறமலை நாடு என்று பதினேழாம் நூற்றாண்டு வரை அறியப்பட்ட பகுதியே இன்றைய அரூர் பகுதியாகும். வட்டத் தலைநகராக விளங்கும் அரூர் பகுதி 30க்கும் மேற்பட்ட ஊர்களில் கிறிஸ்தவர்கள் பரந்து காணப்படுகின்ற பங்காகும்.
1930 முதல் 1949 வரை B.பள்ளிப்பட்டி பங்குத்தந்தையின் கண்காணிப்பில் அரூர் இருந்தது. 1949 முதல் 1979 வரை தென்கரைக்கோட்டை பங்குத்தந்தையர்கள் பொறுப்பிலும் அரூர் பகுதி கிறிஸ்தவர்கள் வழிநடத்தப்பட்டு வந்தனர். தென்கரைக்கோட்டை பங்கில் பணியாற்றிய அருட்தந்தை ரெவேல், MEP அடிகளார் முயற்சியால், 1955 ஆம் ஆண்டு அரூர் வன அலுவலகம் அருகில் 2.14 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, சிற்றாலயம் ஒன்றும் எழுப்பப்பட்டது.
வட்டத் தலைநகரான அரூர் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அன்றைய சேலம் ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள், அரூரினை புதிய பங்காக 11 ஜூலை 1979 இல் உருவாக்கினார். அருட்தந்தை. மரியோ ரோடாஷினி அவர்களை முதல் பங்கு தந்தையாக நியமித்தார். இன்று பங்கு ஆலயம் மற்றும் மாணவர் விடுதி அமைந்துள்ள 4.92 ஏக்கர் நிலத்தை 07.08.1979 அன்று வாங்கி, முதல் பங்குத்தந்தை இல்லத்தை கட்டி எழுப்பி 10.09.1982 அன்று புனிதப்படுத்தி புதிய இல்லத்தில் தங்க ஆரம்பித்தார். ஏற்கனவே 1955 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட நிலத்தில் 6 ஜூன் 1983இல் புனித அன்னாள் ஆங்கில வழிப் பள்ளியையும், 1 ஜூலை 1983இல் புனித அன்னாள் தமிழ் வழித் துவக்க பள்ளியும் நிறுவினார். இப்பள்ளியில் பணிபுரிய சென்னை புனித அன்னாள் சபை சகோதரிகள் அழைக்கப்பட்டு, 18 ஜூன் 1983இல் சகோதரிகள் தங்கள் பணியை துவங்கினர். 1984இல் சித்தேரி மலையிலும் தங்கள் இல்லத்தை அன்னாள் சபை கன்னியர்கள் அமைத்தனர்.
06.01.1989 இல், 6.84 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் 01.06.1989 முதல் புனித மரியாள் உயர்நிலைப் பள்ளியை அருள்திரு. மரியோ ரொடோஷினி நிறுவினார். உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிய மதுரை அமலவைக் கன்னியர்கள் முன் வந்தனர். 01.07.1989 முதல் அவர்கள் பள்ளியில் பணிபுரியத் துவங்கினர். மாணவர்களும், மாணவிகளும் தங்கி படிக்க புதுவாழ்வு சிறுவர் இல்லத்தை துவங்கினார். மாணவர்களை கண்காணிக்க கோவை புனித மைக்கேல் துறவற சகோதரர்கள் உதவினர். புனித அன்னாள் சபை சகோதரிகள் பொறுப்பில் மாணவியர் இல்லம் செயல்பட ஆரம்பித்தது.
இப்பொழுது இருக்கும் அழகிய பங்கு ஆலயம் அருட்தந்தை. மரியோ ரொடேஷினி காலத்தில் கட்டி எழுப்பப்பட்டு, 25.04.1993 அன்று புனிதப்படுத்தப்பட்டது.
அரூரை அறிவூராக மாற்ற முன்வந்த அருட்திரு. மரியோ ரொடோஷினி, குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தாராளமாக பொருளுதவி செய்தவர். பலரை ஆசிரியர் பயிற்சிக்கும், செவிலியர் பயிற்சிக்கும் அனுப்பி வைத்தார். ஆலய வளாகத்தில் கட்டிடங்கள் எழுப்பி இளைஞர்களுக்கு தட்டச்சுப் பயிற்சி கொடுத்தார். 07.05.1993இல் அருள்தந்தை மரியோ ரொடோஷினி அரூரில் இருந்து மாற்றப்பட்டு, திருச்செங்கோடு வட்டார பங்குகளின் வளர்ச்சிப் பணிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அருள்தந்தை மரியோவை தொடர்ந்து அருள்தந்தையர்கள் M. அந்தோணிசாமி, N.S. இருதயநாதன், M. அருள்சாமி, S. யேசுதாஸ், J. ஆரோக்கியசாமி, பாக்கியநாதன், மிக்கேல் ஆண்ட்ரூஸ் மற்றும் தேவசகாயம் சுந்தரம் ஆகியோர் பங்குத்தந்தையர்களாக பணியாற்றினார்கள்.
1989 இல் ஆரம்பிக்கப்பட்ட புனித மரியாள் உயர்நிலைப்பள்ளி 1998ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புனித அன்னாள் சபை சகோதரிகள் தங்கள் பணியை முடித்துக்கொண்டு வேறிடம் செல்ல, 2013 ஆம் ஆண்டு முதல் கொன்சாகா சபை சகோதரிகள், மாணவியர் இல்லம் மற்றும் புனித அன்னாள் ஆங்கில வழிப் பள்ளி ஆகியவற்றிற்கு பொறுப்பேற்றனர்.
2019 மே மாதம் முதல் ஆயரின் அழைப்பின் பேரில் இயேசு சபை குருக்கள் பங்கு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர். 2022 மே மாதம் புனித கொன்சாகா சபை சகோதரிகள் புனித அன்னாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி- ஆங்கில வழிக் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இயேசு சபையினர் இப்பள்ளியையும் 2022 ஜூன் முதல் வழி நடத்துகின்றனர்.
வேலூர் - தூய நெஞ்ச சபை அருட்சகோதரிகள், இயேசு சபையினரோடு இணைந்து பணியாற்ற 2023 மே மாதம் அழைக்கப்பட்டனர்.
அரூர் பங்கின் வளர்ச்சிகாக ஆயர் மேதகு. லாரன்ஸ் பயஸ் அவர்கள், அரூர் பங்கை இரண்டாகப் பிரித்து வேப்பம்பட்டியை மையமாகக் கொண்ட புதிய மறைபணித்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இப்புதிய பணித்தளத்தில் பொறுப்பாளராக Society of St. Eugene de Mazenod சபையை சார்ந்த அருள்திரு. டேவிட் சுகுமார், ஜூன் 2015 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரலாறு ஆவணப்பதிவு அருள்திரு. A. சூசைராஜ்
சபைகள்:
மரியாயின் சேனை
புனித வின்சென்ட் தே பவுல் சபை
இயக்கங்கள் :
அன்னை தெரசா குழு- பெண்கள்
விடிவெள்ளி குழு- ஆண்கள்
பீடச்சிறார்கள்
இளையோர் இயக்கம்
கன்னியர்கள் சபை :
தூய நெஞ்ச சகோதரிகள்- வேலூர்
பங்கில் உள்ள கத்தோலிக்க பள்ளிகள்:
1. புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி
2. புனித அன்னாள் தொடக்கப்பள்ளி
3. புனித அன்னாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி -ஆங்கில வழிக்கல்வி.
பங்கில் உள்ள கெபிகள்:
1. தூயஇருதய ஆண்டவர்
2. புனித அந்தோணியார்
3. புனித லூர்து அன்னை
முன்னாள் பங்கு தந்தையர்கள்களின்பெயர்கள்:
Fr. மரியோ ரோடேஷினி, MEP
தருமபுரி மறைமாவட்ட அருட்தந்தையர்கள்:
Fr. M. அந்தோணிசாமி
Fr. N.S. இருதயநாதன்
Fr. M. அருள்சாமி
Fr. S. யேசுதாஸ்
Fr. J. ஆரோக்கியசாமி
Fr. பாக்கியநாதன்
Fr. மைக்கேல் ஆண்ட்ரூஸ்
Fr. தேவசகாயம் சுந்தரம்
இயேசு சபை அருட்தந்தையர்கள் 2019 மே மாதம் முதல்:
Fr. P. S. அருள், SJ
Fr. ஜான் பால், SJ
Fr. பெல்லார்மின், SJ
Fr. செபாஸ்டியன், SJ
Fr. வி. ஜான் மைக்கேல், SJ
தகவல்கள்: பங்குதந்தை அருள்பணி. ஜான் மைக்கேல், SJ அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: Mr Yesudass Joseph Krishnagiri