தூய உபகார அன்னை ஆலயம்
இடம்: அன்னூர், நாகமாபுதூர், அன்னூர் அஞ்சல், 641653
மாவட்டம்: கோயம்புத்தூர்
மறைமாவட்டம்: கோயம்புத்தூர்
மறைவட்டம்: ஈரோடு
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், புஞ்சை புளியம்பட்டி
பங்குத்தந்தை அருள்பணி. ஆல்பர்ட் நெல்சன்
குடும்பங்கள்: 60
ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி
திருவிழா: செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மூன்று நாட்கள்
வழித்தடம்:
கோயம்புத்தூர் -சத்தி சாலை -அன்னூர் 33கி.மீ
ஈரோடு -ஊட்டி -அன்னூர் 75கி.மீ
திருப்பூர் -மேட்டுப்பாளையம் -அன்னூர் 36கி.மீ
Location map: The Church Of Our Lady Of Ransom
https://maps.google.com/?cid=12517643575756475193&entry=gps
வரலாறு
அன்னூர் பகுதியானது, வாலிபாளையம் புனித இராயப்பர் சின்னப்பர் பங்கின் கீழ் இருந்தது.
அப்போதைய மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களின் அனுமதியோடு, பங்குத்தந்தை அருட்பணி. மரிய அந்தோணி அவர்களின் தீவிர முயற்சியால், 2000 ஆம் ஆண்டு அன்னூரில் நாகமாபுதூரில் ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டது. அவருக்குப் பிறகு அன்னூர் ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி. ஜார்ஜ் சகாயராஜ் (2003-2016) அவர்களின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு, 13 வருடங்களாக திருப்பலிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொடர்ந்து அருட்பணி. மரிய ஜோசப் பாலு அவர்கள் சிறிது காலம் பணிபுரிந்தார்.
பிறகு மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் அனுமதியோடும் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி. பெலிக்ஸ் ஆண்டனி அவர்களின் தீவிர முயற்சியாலும், அன்னூரில் இருந்த சிறிய ஆலயம் மாற்றப்பட்டு, புதிய ஆலயம் கட்டப்பட்டு, 22.04.2018 அன்று மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு முதல் அன்னூர் ஆலயமானது, புஞ்சை புளியம்பட்டி பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்பணி. ஜான் ஜோசப் ஸ்தானிஷ் அவர்கள் இவ்வாலய வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தார்.
தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி. எட்வர்ட் மற்றும் அருட்பணி. இக்னேசியஸ் திரவியம் ஆகியோரின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு திருப்பலிகள் ஆலயத்தில் நடைபெற்று வந்தது.
2023 முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுள்ள அருட்பணி. ஆல்பர்ட் நெல்சன் அவர்களின் வழிகாட்டுதல்களோடு, அன்னூர் ஆலயம் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. H Antony D'Curz