புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: ஊத்தங்கரை, 635207
மாவட்டம்: கிருஷ்ணகிரி
மறைமாவட்டம்: தருமபுரி
மறைவட்டம்: அரூர்
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை: அருட்பணி. மரியதாஸ்
குடும்பங்கள்: 158
அன்பியங்கள்: 7
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 09:00 மணி
திங்கள், புதன், வியாழன் திருப்பலி காலை 06:15 மணி
செவ்வாய் மாலை 05:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
வெள்ளி மற்றும் சனி திருப்பலி மாலை 05:30 மணி
மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை மாலை 05:30 மணிக்கு அந்தோனியார் நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை.
மண்ணின் இறையழைத்தல்:
அருட்பணி. சார்லஸ் கிரேஸ், SDB
திருவிழா: ஜூன் மாதம் 13-ம் தேதி
வழித்தடம்: ஊத்தங்கரையில் உள்ள கிருஷ்ணகிரி சாலையில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு எதிரே இவ்வாலயம் அமைந்துள்ளது.
Map: https://maps.app.goo.gl/oWg121GgnpJnWAS16
வரலாறு:
பசுமைப்பரப்ப பாடிவரும் பாம்பாற்றின் மருங்கில் பாங்குடன் ஓங்கி நிற்பதே ஊற்றங்கரை. சொல் வழக்கில் ஊத்தங்கரை ஆனது.
ஊத்தங்கரையில் கத்தோலிக்கம் வேரூன்றி சுமார் 130 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. 1881 ஆம் ஆண்டு அன்றைய சேலம் மாவட்ட ஆட்சியரால் உரோமன் கத்தோலிக்க திருமறைக்காக ஊத்தங்கரையில் ஒரு நிலம் கொடுக்கப்பட்டது. அந்நிலத்தில் தான் பின்னர் தற்போது இருக்கும் ஆலயம் கட்டப்பட்டது.
சில விவசாய கிறிஸ்தவர்கள் சேலம், கோலார் மற்றும் பல இடங்களில் இருந்து 1920-ல் விசுவாசப்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கு விவசாய பணிக்காக குடியமர்த்தப்பட்டனர். அக்கால கட்டத்தில் ஊற்றங்கரை முக்கிய கிராமமாக இருந்தது.
விவசாயம் தவிர்த்து மற்ற வேலைகளுக்காக விசுவாசப்பட்டியில் இருந்தும் மற்ற ஊர்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் 1940-களில் பெரும் அளவில் இங்கு குடியேறினர். அதைத்தொடர்ந்து ஒரு சிற்றாலம் ஊத்தங்கரையில் அமைக்கப்பட்டு, சில நாட்கள் தென்கரைக்கோட்டை பங்குத்தந்தையர்கள் கண்காணிப்பிலும், MEP அருள்தந்தையர் கண்காணிப்பிலும் மற்றும் வேலூர் சலேசியன் அருள்தந்தையர்கள் கண்காணிப்பிலும் ஊத்தங்கரை சிற்றாலயம் இருந்தது. பின்பு 1969இல் விசுவாசம்பட்டி புதிய பங்காக உருவானது. அதன் பின் ஊத்தங்கரை அதன் கிளைப்பங்கானது. சுமார் 14 ஆண்டுகள் ஊத்தங்கரை கிளை பங்காக செயல்பட்ட பின் பழைய சிற்றாலயம் இடிக்கப்பட்டு, புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 10-10-1982
அன்று அர்ச்சிக்கப்பட்டது. பின்னர் 01.01.1983 அன்று முதல் தனிப்பங்காக உருவானது.
மீண்டும் அருள்பணி. சி. மைக்கேல் காலகட்டத்தில் நன்கொடையாளர் உதவியுடன் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு, 20-7-1994ல்- சேலம் மறைமாவட்ட ஆயர் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. பின்னர் 2005 ஆம் ஆண்டில் புனித அந்தோனியார் கெபி ஒன்று கட்டப்பட்டது.
பங்கில் உள்ள சபைகள், இயக்கங்கள்:
1. இளையோர் குழு
2. மரியாயின் சேனை
3. வின்சென்ட் தே பவுல் சபை
4. பங்குப்பேரவை
5. பாடகற் குழு
6. பீடச் சிறார்
7. பங்கு நிதிக்குழு
கன்னியர் சபை:
இயேசுவின் கன்னியர்கள் சபை
பங்கின் கல்வி நிலையம்:
மேரி வார்டு மேல்நிலைப் பள்ளி
பங்கின் கெபி:
புனித அந்தோனியார் கெபி
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருள்பணி. சி. மைக்கேல் (1983-1984)
2. அருள்பணி. அ. ஆரோக்கியராஜ் (1984-1988)
3. அருள்பணி. ச. சவரியப்பன் (1988-1995)
4. அருள்பணி. சி. மைக்கேல் (1995-1996)
5. அருள்பணி. ம. ராயப்பன் (1996-1998)
6. அருள்பணி. அ. ஆரோக்கியராஜ் (1998 -2007)
7. அருள்பணி. ஆ. ஜோசப் (2007-2013)
8. அருள்பணி. ச. சவரியப்பன் (2013-2018)
9. அருள்பணி. ச. இசையாஸ் (2018-2019)
10. அருள்பணி. ஆ. போஸ்கோ மதலைமுத்து (2019-2021)
11. அருள்பணி. மரியதாஸ் (2021 முதல்..)
கோடி அற்புதராம் புனித அந்தோனியாரின் புதுமைமிகு ஊத்தங்கரை ஆலயத்திற்கு செல்வோம் வாருங்கள்!!!
தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மரியதாஸ் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: Mr. Yesudass Joseph Krishnagiri