920 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், வாடியூர்

             


புனித திருமுழுக்கு யோவான் ஆலயம்.

இடம்: வாடியூர், 627 861

மாவட்டம்: தென்காசி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை.

மறைவட்டம்: தென்காசி

ஆலயத்தின் சிறப்பு: இயேசுவின் கண் திறந்த ஆலயம்.

நிலை: பங்குதளம்

கிளைப்பங்குகள்:

1. புனித பரலோக அன்னை ஆலயம், மரியதாய்புரம்

2. புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம், ஆனைகுளம்

3. புனித சூசையப்பர் ஆலயம், குறிச்சான்பட்டி

4. அச்சங்குன்றம்

பங்குத்தந்தை: அருட்பணி. F. லியோ ஜெரால்டு

Mob: +91 96291 08608

குடும்பங்கள்: 580 (கிளைப்பங்குகள் சேர்த்து 1300+)

அன்பியங்கள்: 16

வழிபாட்டு நேரங்கள்:              

ஞாயிறு திருப்பலி: காலை 08:00 மணி

வாரநாட்களில் திருப்பலி: காலை 05:30 மணி அல்லது மாலை 06:30 மணி.     

திருவிழா: ஆகஸ்ட் 29 -ம் தேதிக்குப் பின்னால் வருகிற சனி, ஞாயிறு.   

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி. M. செல்வராஜ் 

2. அருட்பணி. C. அந்தோணி வியாகப்பன்

3. அருட்பணி. S. M. அருள்ராஜ் 

4. அருட்பணி.‌ S. அருள் அந்தோணி,

5. அருட்பணி. A. ஆரோக்கியசாமி, IMS 

6. அருட்பணி. A. பிரான்சிஸ், OSM

7. அருட்பணி. M. வில்சன்

8. அருட்பணி. S. ஞானமிக்கேல், OSB

9. அருட்பணி. S. அருள் நேசமணி 

10. அருட்பணி. J. மைக்கிள் ஜார்ஜ் 

11. அருட்பணி. S. அருள் அந்தோணி மிக்கேல் 

12. அருட்பணி. A. தயாளன் 

13. அருட்சகோ. A. ஜோசப் அருள்ராஜ், SHJ

அருட்சகோதரிகள் :

1. அருட்சகோதரி. S. ஆண்டோ, JMJ

2. அருட்சகோதரி. A. ஹெலன் கிறிஸ்டி, FSM

3. அருட்சகோதரி. M. அருள் மேரி, FSM

4. அருட்சகோதரி. M. விண்ணரசி, SCC 

5. அருட்சகோதரி. S. சுதா, SCC

வழித்தடம்: திருநெல்வேலி, தென்காசி மற்றும் சங்கரன்கோவில் இருந்து சுரண்டை. சுரண்டையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வாடியூர் அமைந்துள்ளது.  

Location map: https://g.co/kgs/gYB7x1

வரலாறு:

கி.பி.16-ம் நூற்றாண்டில் இரண்டு கூட்டுக் குடும்பத்தினர் சாத்தான்குளத்திலிருந்து வாடியூர் வந்து குடியேறினர்.

தொடக்கத்தில் இந்துக்களாயிருந்த இவர்கள் வியாபார நிமித்தமாக காமநாயக்கன்பட்டி கிறிஸ்தவர்களோடும், அவர்கள் வழியாக வேத போதக குருக்களோடும் அறிமுகம் ஆகி கிறிஸ்தவர்கள் ஆயினர்.

காமநாயக்கன்பட்டி பங்கின் தொடக்ககால கிளைப் பங்கான ஆண்டிப்பட்டியில் கூடி, வழிபாடு செய்து வந்தனர்.

அதன்பின் வாடியூரில் பனையோலை வேய்ந்த குடிசைக்கோயில் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். தொடக்கத்தில் இருந்தே வாடியூர், மரியதாய்புரம், கருவந்தா, இராஜகோபாலப்பேரி, ஆனைகுளம் ஆகிய கிராம மக்களின் வழிபாட்டு மையமாக வாடியூர் இருந்து வந்துள்ளது.

கி.பி.1700 களில் புனித திருமுழுக்கு யோவானை பாதுகாவலராகக் கொண்டு கட்டப்பட்ட கல்மண்டபக் கோயிலில் வழிபட்டு வந்துள்ளனர். வீரமாமுனிவர் கால கட்டிடக்கலைப்பாணியில் அமைந்துள்ள இந்த ஆலயம், அவருடன் தொடர்புடைய குருக்களால் கட்டப்பட்டது என்ற விபரத்திற்கு ஆலயத்தில் உள்ள வட்ட எழுத்துக்களும், கல்வெட்டும் சான்று பகர்கிறது. 

1878 இல் வாடியூர், சேர்ந்தமரம் பங்கின் கிளைப்பங்காக ஆனது.

1910 இல் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1913 ஆம் ஆண்டு கல் மண்டபத்தோடு இணைத்து இப்போதுள்ள  ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தேக்குமரத்தால் கொடிமரம் நடப்பட்டு தேர் திருவிழாக்கள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1915க்குப் பின்னர் மரியதாய்புரம், கருவந்தா, இராஜகோபாலப்பேரி, ஆனைகுளம் ஆகியவை தனித் தனிச் சபைகளாக வளர்ச்சி கண்டன.

1920 இல் கோயிலின் தென்பக்கம் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது.

1946 இல் ஊத்துமலை பங்கின் கிளைப்பங்காக வாடியூர் மாற்றப்பட்டது.

1961 இல் தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. மேலும் கோயிலின் வடக்குப் பக்கம் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.

1974 இல் ஆலய முன்மண்டபம் கட்டப்பட்டது.

1989 இல் ஊர் பொதுக்கட்டிடம் கட்டப்பட்டது.

1990 இல் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது.

1994 இல் சுரண்டை பங்கின் கிளைப்பங்காக வாடியூர் ஆனது.

1995 இல் உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

1998 இல் கலையரங்கம் கட்டப்பட்டது.

2003 இல் பழுதடைந்த ஆலய முன்மண்டபம் புதுப்பிக்கப்பட்டது.

2005 இல் உயர்நிலைப்பள்ளிக்கென்று புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

21-5-2006 அன்று வாடியூர் தனிப்பங்காக ஆனது. மரியதாய்புரம், ஆனைகுளம், அச்சங்குன்றம், குறிச்சான்பட்டி ஆகியவை இதன் கிளைப்பங்குகளாயின.

2006 இல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சகாய மாதா ஆலயம் கட்டப்பட்டது.

2007 இல் ஆலயத்தின் உள்ளே பால்கனி கட்டப்பட்டது.                                     

2008 இல் புனித மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டது.

2009 இல் புனித மிக்கேல் துறவற சபை ஆரம்பிக்கப்பட்டது.

2010 இல் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

2011 இல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

2012 இல் தூய ஆரோக்கிய மாதா கெபி கட்டப்பட்டது.         

2013 இல் தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

2015 இல் மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்கூடம் கட்டப்பட்டது. மேலும் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டது.

2017 இல் ஆலயத்தின் வடக்கு பக்கம் கூடாரம் அமைக்கப்பட்டது. 

2021 இல் புதிய வெண்கல கொடிமரம் நடப்பட்டது. புனித அந்தோணியார் கெபி, புனித லூர்து மாதா கெபி கட்டப்பட்டது. கலையரங்கம் புதுப்பிக்கப்பட்டு கிரானைட்தளம் போடப்பட்டது. புனித சவேரியார், புனித செபஸ்தியார் கெபிகள் கட்டப்பட்டன.

2023 இல் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கண் திறந்த அதிசயம்:                    

2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ம் நாள் அன்று மாலையில் ஆலயத்தில் செபமாலை செபித்துக் கொண்டிருந்த சிறு பிள்ளைகளுக்கு ஆலயத்தின் பீடத்திற்கு மேலே உள்ள இயேசுவின் பாடுப்பட்ட சுருபம் கண்களை திறந்து, திறந்து, மூடி காட்சி கொடுத்தது. இந்த அந்த அற்புத அதிசய காட்சியை ஊரில் உள்ள எல்லா மக்களும், சுற்றியுள்ள கிராம மக்களும் அன்று இரவே கண்டு இறைவனுக்கு நன்றி கூறினார்கள். இந்த அற்புத காட்சியை காண தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர்.

பங்கில் உள்ள கெபிகள்:

1. புனித லூர்து மாதா கெபி

2. புனித சகாய மாதா கெபி

3. புனித வேளாங்கண்ணி மாதா கெபி

4. புனித அந்தோனியார் கெபி

5. புனித மிக்கேல் அதிதூதர் கெபி

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. அருள் மாதர் சங்கம்

4. இளம் பெண்கள் இயக்கம்

5. இளைஞர் இயக்கம்

6. பாடகற்குழு

7. பீடச்சிறார்

8. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

9. நிர்வாகக் குழு

10. மறைக்கல்வி 

பங்கின் கல்வி நிறுவனங்கள்:

1. ஆர்.சி தொடக்கப்பள்ளி, வாடியூர்

2. புனித யோவான் மேல்நிலைப்பள்ளி, வாடியூர்

3. ஆர்.சி நடுநிலைப் பள்ளி, மரியதாய்புரம்

4. புனித லொயோலா தொடக்கப்பள்ளி, ஆனைகுளம்

புனித மிக்கேல் அதிதூதர் கெபி:

செப்டம்பர் மாதத்தில் திருவிழா.

சகாய மாதா ஆலயத்தில் மாதத்தின் முதல் சனிக்கிழமை திருப்பலி, அசனம்.

புனித செபஸ்தியார் திருவிழா, ஜனவரி மாதம் 19 ஆம் தேதி சப்பரபவனியுடன் மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

பங்கில் பணியாற்றிய  பங்குத்தந்தையர்கள் பட்டியல்:- 

1. அருட்பணி. L. அலாய்சியஸ் துரைராஜ் (2006-2007)

2. அருட்பணி. அ. அருள் அரசு (2007-2010)          

3. அருட்பணி. ரெக்ஸ் ஜஸ்டின் (2010-2011)

4. அருட்பணி. அ.‌ அந்தோணி சேவியர் (2011-2016)

5. அருட்பணி. ச. ஜோசப் ராஜ் (2016-2017)              

6. அருட்பணி. S.L. ஸ்டீபன் (2017-2022)

7. அருட்பணி. F. லியோ ஜெரால்டு (2022---)

புனித திருமுமுக்கு யோவான் பாதுகாப்பிலும், கண் திறந்து காட்சி தந்த இயேசுன் வழிநடத்துதலிலும், ஆன்மீக வாழ்வில் சிறந்து விளங்கும் இறைமக்களோடு இணைந்து செபிக்கவும், இறைவனுக்கு நன்றி கூறவும் வாடியூர் ஆலயத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. F. லியோ ஜெரால்டு அவர்கள்.

ஆலய வரலாறு, கூடுதல் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்கள் திரு. மரிய சூசை மற்றும் திரு. J. அகஸ்டின் ஆகியோர்.