921 இயேசுவின் திருஇருதய ஆலயம், பெத்தநாடார்பட்டி

   


இயேசுவின் திரு இருதய ஆலயம்

இடம்: பெத்தநாடார்பட்டி, ஆலங்குளம் தாலுகா, தென்காசி மாவட்டம் -627808

மாவட்டம்: தென்காசி 

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: தென்காசி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், பாவூர்ச்சத்திரம் 

பங்குத்தந்தை: அருட்பணி. A. ஜேம்ஸ் 

குடும்பங்கள்: 32

திருப்பலி வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணி (முதல் வெள்ளிக்கிழமை தவிர்த்து)

திருவிழா: ஜூலை மாதத்தில்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ம. அருள் அம்புரோஸ்

2. அருட்பணி. அ. ஞானப்பிரகாசம், OCD (late)

வழித்தடம்: திருநெல்வேலி -தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், மகிழ்வண்ணநாதபுரம் பேருந்து நிறுத்தம் (1K.M)

Location map: https://g.co/kgs/VDjN17

வரலாறு:

1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாளை மறைமாவட்டத்தின் முதல் ஆலயம் என்ற பெருமை பெற்ற ஆலயமாம், பெத்தநாடார்பட்டி ஆலய வரலாற்றைக் காண்போமா...

அப்போதைய தென்காசி பங்குத்தந்தை அருட்பணி. M. S. சலேத் அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ஓடுவேய்ந்த ஆலயப்பணிகள் நிறைவு பெற்று, பாளை மறைமாவட்ட அப்போதைய ஆயர் மேதகு இருதயராஜ் அவர்களால் 22.08.1977 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

2010 ஆம் ஆண்டு பாவூர்ச்சத்திரம் பங்கு தொடங்கிய உடன் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. M. சார்லஸ் அடிகளார் அவர்கள் முயற்சியில், மக்களின் ஒத்துழைப்புடன் ஓடு வேய்ந்த மேற்கூரை மாற்றப்பட்டு, கான்கிரீட் போடப்பட்டு, அப்போதைய ஆயர் மேதகு ஆ. ஜூடு பால்ராஜ் அவர்களால் 20-02-2011 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

பெத்தநாடார்பட்டி ஆலயமானது தொடக்கம் முதல் 1981ஆம் ஆண்டு வரை தென்காசி பங்கிலும், பின்னர் 2010 ஆம் ஆண்டு வரை ஆவுடையனூர் பங்கிலும் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 2010 ஆம் ஆண்டிலிருந்து  பாவூர்ச்சத்திரம் பங்கின் கிளைப்பங்காக பெத்தநாடார்பட்டி ஆலயம் செயல்பட்டு வருகிறது.

பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், முருகன்குறிச்சி, மகிழ்வண்ணநாதபுரம் ஆகிய நான்கு ஊர்களும் இணைந்ததே இவ்வாலயமாகும்.

தற்போது திரு. டேனியல்  அவர்கள் உபதேசியாராக செயல்பட்டு வருகிறார்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. ப. மிக்கேல் ராஜ் அவர்கள்.